பொது இடங்களில் எச்சில் துப்பினால் நாடு கடத்தப்படுவீர்கள் என்று வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு துபாய் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தான், இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் இருந்து வரும் தொழிலாளர்கள் வெற்றிலையை போட்டு குதப்பும் பழக்கம் கொண்டுள்ளனர்.
இவர்கள் வெற்றிலையை மென்று புளிச், புளிச் என்று கண்ட இடங்களில் துப்பி வைத்து விடுகின்றனர். இதனால் பொது இடங்கள் பலவற்றில் சிவப்பு கறைகள் பெருமளவில் தென்படுகின்றன.
நகரமே அசிங்கமாகி விடுகிறது. சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இந்நிலையில், இந்த செயலை தடுப்பதற்காக துபாயில் அதிரடி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி பொது இடங்களில் வெற்றிலையை மென்று எச்சில் துப்புபவர்களை பிடித்து அவர்களின் சொந்த நாட்டுக்கு, உடனடியாக நாடு கடத்திவிட துபாய் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பும் முறைப்படி வெளியிடப்பட்டுள்ளது. துபாயில் யாரும் வெற்றிலை சாப்பிடுவதில்லை.
ஆசிய நாடுகளில் இருந்து வரும் தொழிலாளர்கள்தான் இந்த பழக்கத்தை தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் பரப்பி விட்டுள்ளனர். பொது இடங்கள் அசிங்கம் ஆவதை தடுக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளத