தமிழா தலை நிமிர்...

Sunday, March 29, 2009

தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் நாளுக்குள் முற்றாக அழித்து விடுமாறு இந்திய ஆளும் கொங்கிரஸ் கட்சி சிறீலங்கா அரசுக்கு உத்தரவு..


தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் நாளுக்குள் முற்றாக அழித்து விடுமாறு இந்திய ஆளும் கொங்கிரஸ் கட்சி சிறீலங்கா அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 16ஆம் நாள் முதல் மே 13ஆம் நாள்வரை நடைபெறவுள்ள நிலையில், இந்த உத்தரவை சிறீலங்கா அரசுக்கு கொங்கிரஸ் கட்சி பிறப்பித்திருப்பதாக, கொங்கிரஸ் கட்சியின் நம்பகமான உள்ளக வட்டாரங்கள் மூலம் தமிழ்நாட்டில் தகவல் கசிந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதன்மூலம், அடுத்த தேர்தலில் தாம் வெற்றிபெற முடியும் என கொங்கிரஸ் கட்சி திடமாக நம்புவதால், இந்த காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு தமிழ்நாட்டில் ஆட்சியிலுள்ள தி.மு.க கட்சி உடந்தையாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மற்றொரு பிரதான கட்சியான ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க, இடதுசாரி மற்றும் பொதுவுடமைக் கட்சிகளுடன் நெருங்கிய உறவைப்பேண ஆரம்பித்திருப்பதாலும், ஈழ ஆதரவுக் கட்சிகளும் இந்தக் கூட்டணியில் இணைந்து கொள்ளலாம் என்பதாலும், கொங்கிரசுடன் இணைந்திருப்பதே தமக்கு தேர்தல் வெற்றியை ஈட்டித்தரும் என எண்ணும் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க, ஈழத்தில் தமிழினப் படுகொலையைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாக, தமிழ்நாட்டிலுள்ள தமிழின உணர்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.