தமிழா தலை நிமிர்...

Sunday, March 29, 2009

வருண்காந்தி மீது தே.பா.சட்டம் பாய்ந்தது

வருண்காந்தி மீது தேசியபாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. உத்திரபிரதேச போலீசார் அதிரடியாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சிறுபாண்மையினருக்கு எதிராக பேசியதாக ஏற்கெனவே வருண்காந்தி சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பிரசாரத்தின்போது வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக உத்தரபிரதேசம் போலீசார் வருண்காந்தி மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அவர் பீலிபட் கோர்ட்டில் ஆஜர் ஆனார்.

அவரை முறைப்படி கைது செய்தனர். பின்னர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அது நாளை விசாரணைக்கு வருகிறது. ஜாமீன் கிடைத்தால் நாளை விடுவிக்கப்படுவார். இல்லை என்றால் மேலும் சில நாட்கள் ஜெயிலில் இருக்க வேண்டியது வரும்.

வருண் காந்தி நேற்று கோர்ட்டில் ஆஜர் ஆவதற்காக பாரதீய ஜனதா தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தார். இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

வருண் காந்தியை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். சாலை மறியல் செய்ததுடன் போலீசார் மீது கல்வீசி தாக்கினார்கள். இதனால் போலீசார் தடியடி நடத்தியதுடன் துப்பாக்கி சூடும் நடத்தினார்கள்.

வன்முறை நடந்ததால் உத்தரபிரதேச முதலமைச்சர் மாயாவதி கடும் கோபம் அடைந்துள்ளார். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

வருண் காந்தியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வது குறித்தும் அவர் ஆலோசித்து வருகிறார்.

இது தொடர்பாக அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில் சட்டத்தை யாரும் கையில் எடுத்துக்கொள்ள அனுமதிக்க முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால் பீலிபட் மாவட்ட கலெக்டர் இதுபற்றி கூறும்போது வருண்காந்தியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறினார்.

இந்நிலையில் வருண்காந்தி மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.