தமிழா தலை நிமிர்...

Tuesday, March 10, 2009

சலவை இயந்திரமும், பெண்களின் விடுதலையும


வாடிகன் நகரம்: "மேற்கத்திய நாட்டை சேர்ந்த 20ம் நூற்றாண்டு பெண்களின் விடுதலையில் கருத்தடை மாத்திரைகள் மற்றும் வேலை செய்வதற்கான உரிமையை விட, வாஷிங் மிஷின் தான் அதிக பங்காற்றி உள்ளது' என வாடிகன் நகர பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த வாடிகன் பத்திரிகையில் வெளியான, "சலவை இயந்திரமும், பெண்களின் விடுதலையும்' என்ற கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது:மேற்கத்திய நாட்டை சேர்ந்த 20ம் நூற்றாண்டு பெண்களின் விடுதலைக்கு எது அதிகமாக உதவியது? என்ற விவாதத்தில் மாத்திரைகள், கருச்சிதைவிற்கான உரிமை,வீட்டிற்கு வெளியே பணியாற்ற அனுமதி என பெண்கள் பல்வேறு கருத்துக்களோடு, வாஷிங் மிஷின் என்ற கருத்தையும் தெரிவித்தனர். அதிலும், துணியில் சலவைத்தூள் போட்டு, உரிய ஏற்பாடுகள் செய்து வாஷிங் மிஷினை இயக்கினால் போதும். சலவை செய்யும் வேலை முடியும். வாஷிங் மிஷின் துவைக்கும் போது, வேண்டியவர்களுடன் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டே காபி குடிக்கலாம் என்று தெரிவித்திருக்கின்றனர்.இதில் தொடர்ந்து, வாஷிங் மிஷின் கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து, இன்றைய நவீன இயந்திரம் வரை விவாதித்தனர். இவ்வாறு அந்த பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது...