தமிழா தலை நிமிர்...

Thursday, March 12, 2009

கிழக்கில் 49 ஆயிரம் விதவைகள் - மாகாண அமைச்சர் தகவல்

கிழக்கில் இதுவரை 49 ஆயிரம் விதவைகள் உருவாக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 19, 000 பேர் 40 அகவைக்கு உட்பட்டவர்கள் என்றும் 12,000 பேர் மூன்று மற்றும் அதந்கு மேற்பட்ட குழந்தைகளுடன் வாழ்ந்து வருவதாகவும் மாகாணசபை அமைச்சர் ஒருவர் தொவித்துள்ளார்.

போர் சூழ்நிலை காரணமாக இந்த விதவைகளின் வாழ்க்கைத்தரம் மிகவும் மோசமாக உள்ளதாகவும், பெரும்பாலானவர்கள் உள்ளக இடம்பெயர்வுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தொண்டு நிறுவனப் பணியாளர் ஒருவர் பதிவின் மட்டக்களப்பு செய்தியாளருக்கு தொவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மற்றும் ஆயுதக்குழுக்களால் கொல்லப்பட்ட குடும்பங்களுக்கு தொடர்ந்தும் படையினர் மற்றும் ஆயுதக்குழுக்கள் அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும் கூறினார்.

இதனால் அக்குடும்பங்களின் தலைவியரின் மனோநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பலர் தமது குழந்தைகளுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் கவலை வெளியிட்டார்.

அண்மையில் 14 அகவையுடைய சிறுமி ஒருவர் மட்டக்களப்பில் அவரது தாயார் முன்னிலையில் சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட போதிலும், கிழக்கின் முதலமைச்சர் பிள்ளையானோ, அமைச்சர் கருணாவோ இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.