தமிழா தலை நிமிர்...

Tuesday, March 10, 2009

கொழும்புக்கு அதிக கொழுப்பு

கொழும்பு : "பாகிஸ்தானில் இலங்கை கிரிக் கெட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது' என, இலங்கை அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை வெளியுறவுச் செயலர் பலிதா கொகேனோ கூறியதாவது:பாகிஸ்தான், லாகூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் வெளிநாட்டு சதி இருக்கலாம் என முதலில் பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. எங்களுக்கும் அந்த சந்தேகம் உள்ளது. விடுதலைப் புலிகளுக்கு இந்த தாக்குதலில் தொடர்பிருக்க வாய்ப்பு உள்ளது.இலங்கையில் தங்களுக்கு எதிராக நடந்து வரும் ராணுவ தாக்குதலில் இருந்து அரசின் கவனத்தை திசை திருப்புவதற்காக, விடுதலைப் புலிகள் இது போன்ற நடவ டிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம்.இவ்வாறு பலிதா கூறினார்.

இலங்கை ராணுவ அமைச்சகம் இணைய தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:விடுதலைப் புலிகளுக்கும்-லஷ்கர் அமைப்புக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, லாகூர் தாக்குதலில் புலிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த கிட்டு, கடந்த 1992ல் பெஷாவரில் ஆயுதங்கள் வாங்குவதற்காக பேச்சு நடத்தியதாக வெளியான தகவலை நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும்.இலங்கை கிரிக்கெட் வீரர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டு, அதன் மூலம் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு பேரம் பேசுவதற்கான முயற்சிகளில் புலிகள் ஈடுபடலாம் என்றும் எங்களுக்கு தகவல் கிடைத்துள் ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் ஆதரவு இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், "கடந்த சில நாட்களாக ராணுவத்தின் மீது புலிகள் பீரங்கி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில், ஏராளமான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்' என லாகூரில் கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல்: புலிகளை இணைத்து இலங்கை சந்தேகம்தெரிவிக்கப்பட்டுள்ளது.