Saturday, July 18, 2009
இலங்கையில் உள்நாட்டு, வெளிநாட்டு தன்னார்வ நிறுவனங்கள் மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்படும்
ஜாதிவாதிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்
மாற்றுக் கருத்துக்கொண்ட இணையத் தளங்களை முடக்க சிறிலங்கா அரசு தீர்மானம்
இவ்வாறான இணையத்தளங்களை யார் நடத்தி வருகின்றார்கள், எங்கிருந்து நடத்துகின்றார்கள் என்ற தகவல்களைக் கண்டறியுமாக குற்றப் புலனாய்வுத்துறைக்கும் சிறிலங்கா அரசு உத்தரவிட்டிருக்கின்றது.அரசின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலான பரப்புரைகளை மேற்கொண்டுவரும் இணையத் தளங்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை ஒன்று முடுக்கிவிடப்பட்டுள்ளது' என அரச ஆதரவுச் சிங்கள நாளேடான 'தினமின' இன்று செய்தி ஒன்றை வெளியிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது.அரசை சங்கடத்துக்குள்ளாக்கும் வகையிலான செய்திகளை வெளியிட்ட இணையத்தளங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான விசாரணைகளை காவல்துறையினர் தொடங்கியுள்ளார்கள் எனவும் தினமினவின் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
Thursday, June 4, 2009
நன்றிகள்.....!
உயிர் வலி சிந்தி அழும்போது முதுகுவலிக்கக் கவிதை எழுதிய கலைஞருக்கும் ....!
பதவியை துறக்கப் போவதாக புரட்சி அறிக்கை விட்ட கனிமொழிக்கும் ....!
கருணைக்கொலை செய்ய நெஞ்சுவலிக்கு மத்தியிலும் ஆயுதம் கொடுத்த பாரதப் பிரதமர் மன்மோகனுக்கும்
.... முத்துக்குமாரையும் ஏனைய பலரையும் தீக்கு தின்னக் கொடுத்த சோனியாவின் வெளியுறவுக் கொள்கைக்கும் .....
சீமானும் இன்ன பல உணர்வாளரும் தவத்தை செய்வதற்க்காக சிறையிலே இடம் அருளியதங்கபாலுவுக்கும் ...
இன்னும் மௌன மொழியினால் முனிதப் பேரவலத்திற்க்குசம்மதம் தந்த அனைவருக்கும் கருகிப் போன ஈழத்தமிழன் சார்பிலும் ஊனமாக்கப்பட்ட உலகத்தமிழன் சார்பிலும்நன்றிகளும்வணக்கங்களும்....!
மட்டுவில் ஞானக்குமாரன் (இலங்கை)
அன்பின்,தமிழினிமாண்ட வீரர் கனவு பலிக்கும், மகிழ்ச்சி கடலில் தமிழ்மண் குளிக்கும்
முகாம்களில் வாழும் அப்பாவித் தமிழ் மக்களின் துன்பங்களைச் சொற்களில் விளக்க முடியாது: சிறிலங்காவின் தலைமை நீதிபதி கவலை
நீர்கொழும்பில் உள்ள மாரவிலவில் நீதிமன்ற வளாக திறப்பு விழா நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வன்னிப் பகுதியைச் சேர்ந்த இடம்பெயர்ந்த அப்பாவித் தமிழ் மக்கள் குடும்பங்கள் தங்கியுள்ள 'நிவாரண ஊர்களுக்கு' சென்றிருந்தேன். அவர்களின் துன்பங்களையும், வேதனைகளையும் என்னால் சொற்களில் விளக்க முடியாது.
நாட்டில் பெரும்பான்மை இனமோ, சிறுபான்மை இனமோ இல்லை ஒரே இனம்தான் இருக்கிறது என்று நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்போம் என்றால் அது முழுப் பொய்யாகத்தான் இருக்க முடியும்.
இடம்பெயர்ந்த அப்பாவித் தமிழ் மக்கள் குடும்பங்கள் வாழும் செட்டிக்குளம் முகாம்களுக்கு நான் சென்றிருந்தேன். அவர்களின் பரிதாப நிலையை என்னால் விளக்க முடியாது. அவர்களுக்கு என்னால் ஆறுதல் சொல்ல முடியவில்லை. அளவற்ற துன்பத்துக்கும் இடர்களுக்கும் இடையே அவர்கள் உயிர் வாழ்கின்றனர்.
நமது பகுதிகளில் நாம் மாபெரும் கட்டடங்களைக் கட்டி வருகிறோம். ஆனால் இடம்பெயர்ந்த அப்பாவித் தமிழ் மக்கள் கூடாரங்களில் வாழ்கின்றனர். ஒரு கூடாரத்தில் 10 பேர் தங்கியுள்ளனர். கூடாரத்தின் நடுப்பகுதியில் மட்டுமே அவர்கள் நேராக நிமிர்ந்து நிற்க முடியும்.
கூடாரத்தின் மற்ற பக்கத்தில் நிமிர்ந்தால் கழுத்து முறிந்துவிடும். கழிப்பிடங்களுக்குச் செல்வதற்குக்கூட அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
என் உணர்வுகளை என்னால் அவர்களிடம் வெளிப்படுத்த முடியவில்லை. அவர்களின் துன்பங்களைக் கண்டு நாங்களும் அழுகிறோம் என்பதை அவர்களிடம் என்னால் சொல்ல முடியவில்லை. அவர்களுக்கு நிவாரண உதவிகளை நாம் போதிய அளவுக்கு வழங்க வேண்டும். அதைச் செய்யத் தவறினால் நாம் பழிக்கு ஆளாவோம்.
இந்த நாட்டின் சட்டத்தில் நீதி கிடைக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்க முடியாது. அந்த மக்களின் துன்பங்கள் இந்த நாட்டின் நீதிமன்றங்களுக்குக் கொண்டு வரப்படவில்லை.
இடம்பெயர்ந்த மக்களின் நலனில் இந்த நாட்டின் சட்டம் எந்த அக்கறையும் காட்டவில்லை. இதை நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். இவ்வாறு சொல்வதற்காக நான் தண்டிக்கப்படலாம் என்று சிறிலங்கா தலைமை நீதிபதி சரத் என்.சில்வா குறிப்பிட்டார்.
Wednesday, June 3, 2009
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில்...
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில்...அதேவேளை, கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து, சுலோவாக்கியா, சுலோவேனியா, சுவிற்சலாந்து, மெக்சிகோ, பிரேசில், சிலி, இஸ்ரேல் ஆகிய நாடுகள் எதிர்த்து வாக்களித்த 17 நாடுகளில் அடங்கியுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சிறீலங்காவிற்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த இஸ்ரேல், சிறீலங்கா அரசாங்கத்தின் படை நடவடிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையும் உலக சுகாதார நிறுவனமும் விசாரணைகளை நடத்தவேண்டும் என முன்னதாக வலியுறுத்தியிருந்தது.
சிறீலங்கா அரசின் கண்மூடித்தனமான படை நடவடிக்கை, மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் இஸ்ரேல் கோரிக்கை விடுத்திருந்தது.
அத்துடன், உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை சிறீலங்காவுக்கு வழங்குவதை எதிர்த்திருந்த இஸ்ரேல், சிறீலங்கா மீது அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்திருந்தது.
இஸ்ரேலின் இந்த அறிவிப்பு சிறீலங்கா அரசாங்கத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக இஸ்ரேலுடன் கலந்துரையாடப்போவதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது. இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியம் நாடுகள் சார்பாக தற்போது தலைமைப் பொறுப்பை வகிக்கும் செக் குடியரசும் கருத்துக்களை வெளியிட்டிருந்தது.
விடுதலைப் புலிகள் மக்களை கேடயமாக பயன்படுத்தியது கண்டனத்திற்குரியது. ஆனால், சிறீலங்கா அரசாங்கம் பொதுமக்களின் உயிர்களை மதிக்கவில்லை. மக்கள் மிகவும் குறுகிய நிலப்பரப்பில் செறிவாக இடம்பெயர்ந்து இருந்தபோதும் சிறீலங்கா அரசாங்கம் கனரக ஆயுதங்களை பயன்படுத்தியிருந்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என அது தெரிவித்திருக்கின்றது.
மோதல்களின் பின்னர் நாம் மனித உரிமைகளின் நிலை தொடர்பாக ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். பலவந்தமாக காணாமல் போதல், தடுத்துவைத்தல், கடத்தல், கருத்து சுதந்திரத்தை தடுத்தல் போன்றவை கவலையை தருகின்றன எனவும் செக் குடியரசு தெரிவித்துள்ளது.
சிறீலங்காவிற்கு ஆயுதங்களை விற்பனை செய்வதில் செக் குடியரசும் ஒரு முக்கிய நாடு என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் சிறீலங்காவிற்கு எதிரான நிலைப்பாட்டை அது எடுத்திருந்தது. இதேவேளை, இந்த வாக்கெடுப்பில் சிறீலங்காவிற்கு ஆதரவாக இந்தியாவுடன் இணைந்து சீனாவும், ரஷ்யாவும் குரல் கொடுத்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து செயற்படுகின்றன என்று இந்திய ஊடகமான ஐ.ஏ.என்.எஸ் ஏற்கனவே தகவல் வெளியிட்டிருந்தது.
இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, சீனா, கட்டார், ஜோர்தான், மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, கானா, நிக்கரகுவா, பொலிவியா, சவூதி அரேபியா, தென் ஆபிரிக்கா, எகிப்த் ஆகிய நாடுகள் சிறீலங்காவிற்கு ஆதரவான வாக்குகளை வழங்கிய நாடுகளில் அடங்கியுள்ளன.
கியூபாவும் சிறீலங்காவுக்கு ஆதரவு தெரிவித்தது. முன்பு பல நாடுகளை ஆண்ட நாடுகள் தற்போது சிறிய அபிவிருத்தி அடைந்துவரும் நாட்டை சிறுமைப்படுத்துவதாக கியூபா குற்றம் சாட்டியுள்ளதுடன், அது ஐரோப்பிய ஒன்றியத்தையும் கடுமையாக சாடியிருந்தது.
இதில் தமிழ் மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்தை ஆதரித்த தென் ஆபிரிக்காவும் சிறீலங்காவின் இனப்படுகொலையை நியாயப்படுத்தும் வகையில் தனது ஆதரவை வழங்கியிருந்தமை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறீலங்கா தொடர்பாக மேற்கு நாடுகள் இரட்டை நிலைப்பாட்டுடன் இருப்பதாக இந்தோனேசியா குற்றம் சாட்டியது. ஆப்கானிஸ்தான், பாலஸ்தீன சூழ்நிலைகளுடன் ஒப்பிட்டு தமது உரிமை மீறல் விசாரணைகளில் இரட்டை நிலைப்பாட்டை மேற்கு நாடுகள் கொண்டிருப்பதாக இந்தோனேசியா சாடியுள்ளது.
இதேவேளை, சிறீலங்காவின் படை நடவடிக்கையின் வெற்றியை இந்தியா உட்பட 14 நாடுகள் பாராட்டியுள்ளன. அதேவேளை, இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்காக சர்வதேச உதவி கோரும் தீர்மானம் ஒன்று சிறீலங்கா அரசாங்கத்தினால் இங்கு முன்வைக்கப்பட்டது.
அந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது அதிலும் சிறீலங்காவிற்கு ஆதரவான நிலைப்பாடு கிடைத்துள்ளது. அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 29 வாக்குகளும், எதிராக 12 வாக்குகளும் கிடைத்தன. 6 நாடுகள் அந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
இதுஇவ்வாறிருக்க, சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச சட்டமீறல்கள் தொடர்பாக சர்வதேச ரீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்புகளும் வலியுறுத்தி வருகின்ற நிலையில், ஐக்கிய நாடுகள் சபை சிறீலங்கா அரசின் அத்துமீறல்களை மூடி மறைத்து, அதனைப் பாதுகாக்க முயல்கின்றது என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.
களத்தில் இறுதியாக நடந்தது என்ன?- தமிழ் மக்கள் முன் இன்றுள்ள பாரிய பணி: செ.பத்மநாதன் விளக்கம்
அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பாகிய 'செய்தியலைகள்' நிகழ்ச்சிக்கு அவர் வழங்கிய நேர்காணலின் விபரம் வருமாறு:
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பிரிவினர் கடந்த 17 ஆம் நாள் படுகொலை செய்யப்படும் அந்த துயரமான வேளையிலும் உங்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர். அவர்கள் இறுதியாக என்ன விடயத்தை உங்களுடன் பகிர்ந்துகொண்டனர்?
எனது அண்ணன் நடேசன், தம்பி புலித்தேவன் இவர்களின் மரணம் என்னை மிகவும் ஆழமாக பாதித்தது. எமது மக்கள் மிகவும் கொடுமையாக எதிரிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டபோது - ஒவ்வொரு கணமும் எமது உடன்பிறப்புகள் சுட்டுவீழ்த்தப்பட்டபோது - நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இவர்கள் இருவரும் என்னுடன் கலந்துரையாடினார்கள்.
போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக சிறிலங்கா அரசாங்கத்துடன் நாம் பேசினோம். சிறிலங்கா அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவரின் ஊடாக - சிறிலங்கா அரச தலைவரின் ஒப்புதலின்படி - நடேசன், புலித்தேவன் ஆகியோர் இராணுவ முகாமுக்கு சென்று கலந்துரையாடுவற்காக வெள்ளைக் கொடியுடன் சென்றுகொண்டிருந்தபோது சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்கள்.
அதேபோன்று பொதுமக்கள் சிலரும் வெள்ளைக் கொடியுடன் சென்றபோது சிறிலங்கா அரசாங்கம் தனது வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு அவர்களை சுட்டுக்கொலை செய்தது. இதுதான் உண்மை.
நடேசன், புலித்தேவன் ஆகியோர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பின்னரே அவர்கள் சரணடைவது குறித்த தகவல் தமக்கு கிடைத்ததாக சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியிருக்கிறார். இது குறித்து என்ன கூறுகிறீர்கள்?
சரணடைவு குறித்து 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே சிறிலங்கா தரப்புடன் பேசப்பட்டது. முதற்கட்ட நடவடிக்கையாக முக்கிய அமைச்சர் ஒருவரும் எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இரண்டு கத்தோலிக்க ஆயர்களும் அங்கு செல்வதாக இருந்தது. அந்த சம்பவம் ஏதோ காரணத்தினால் நடைபெறாமல் போய்விட்டது.
எனினும் நாம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினோம். புலிகளை நேரடியாக வந்து பேசலாம் என்று சிறிலங்கா தரப்பில் எமக்கு கூறப்பட்டது.
சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு இந்த தகவல் அறிவிக்கப்பட்டதா? இல்லையா? என்பது எமக்கு தெரியாது. ஆனால் சிறிலங்கா அரச தலைவரின் உத்தரவுப்படியே இந்த சரணடைவு நடைபெற்றது என்பது அப்பட்டமான உண்மை.
இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த மக்களை பாதுகாக்குமாறு அனைத்துலக சமூகத்திடம் கோரும் நடவடிக்கையில் நீங்கள் இறுதி நாட்களில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டிருந்தீர்கள். இதற்கு ஏதேனும் சாதகமான சமிக்ஞைகள் கிடைத்தனவா?
அனைத்துலக ரீதியில் நாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம். ஆனால் சிறிலங்கா அரசு பல்வேறு காரணங்களை கூறி எமது முயற்சிகளை தட்டிக்கழித்துக்கொண்டே வந்தது.
கடைசித் தருணத்தில் அதாவது மே 16 ஆம் நாளும் நாங்கள் போர்நிறுத்தம் குறித்து பேசுவதற்கு முயற்சிகள் எடுத்தோம். அவர்கள் அதனையும் தட்டிக்கழித்தனர். அனைத்துலக அரசுகள் கூட எவ்வளவோ அழுத்தங்களைக் கொடுத்தும் சிறிலங்கா அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை.
சிறிலங்கா படையினரால் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் மக்களுக்காக - அங்கே நாளாந்தம் உயிரிழக்கும் முதியவர்களுக்காக - அங்கே கடத்தப்பட்டு காணாமல் போகும் எமது உறவுகளுக்காக - நாங்கள் உடனடியாக செய்ய வேண்டிய நடவடிக்கை என்ன?
எமது இனம் ஊனமாக்கப்பட்டுவிட்டது. சிறிலங்கா அரசு அந்த முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது.
புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் கைகளில்தான் எமது இனத்தின் தலைவிதி இன்று தங்கியிருக்கின்றது. நாம் ஒரு அரசியல் சுனாமியை சந்தித்து, அந்த அழிவின் வருத்தத்தில் இருக்கின்றோம். எனவே புலம்பெயர் வாழ் மக்கள் தமது உடன்பிறப்புக்களை காப்பாற்ற வேண்டிய கடமையில் இருக்கின்றார்கள்.
புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் உடனடியாக அந்தந்த நாடுகளில் அங்குள்ள சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு - எந்தவித வன்முறையையும் தொடாமல் - போராட்டங்களை மேற்கொண்டு, எமது மக்களுக்கு உதவும்படி அந்த நாடுகளின் அரசுகளை கேட்க வேண்டும். அந்த அரசுகளின் அனுதாபத்தை நாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த போராட்டத்திற்கு புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் தங்களால் இயன்ற உதவிகளை வழங்க முன்வர வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையுடனும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்துடனும் நாங்கள் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறோம். எமது மக்களுக்குரிய உணவும் மருந்துப் பொருட்களும் சென்றடைய வேண்டும். இந்திய அரசாங்கத்துடனும் இது குறித்து பேசிக்கொண்டு இருக்கிறோம்.
எமது தலைவர் விட்டுச்சென்ற கடைமையை பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டில் இருக்கிறோம். எனவே, அனைவரும் வேறுபாடுகளை மறந்து முன்வந்து எமது இனத்தை காப்பாற்றுங்கள். முள்வேலிகளுக்கு இடையில் அகப்பட்டுக்கொண்டிருக்கும் எமது உறவுகளைக் காப்பாற்றுங்கள் என்று உங்கள் அனைவரையும் மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.
தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலை வெற்றிடமாகியுள்ள நிலையில் - தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமை ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதனை எவ்வாறு நீங்கள் முன்னெடுத்து வருகிறீர்கள்?
மிகவும் கடுமையாக அந்த முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். உண்மையில் இந்த வெற்றிடம் என்பது எதிர்பாராத நிகழ்ச்சியாக அமைந்துவிட்டது. நாம் அனைத்து தரப்பினருடனும் குறிப்பாக சகல அரசியல் கட்சிகளுடனும், இயக்கங்களுடனும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மிகவிரைவில் அந்த முயற்சி வெற்றிபெறும்.
தமிழ் இன அழிப்பின் இறுதிக்கட்ட போரில் படுகொலை செய்யப்பட்ட மக்கள் குறித்த ஆதாரங்களை சேர்த்து அவற்றை மனித உரிமை அமைப்புக்களுக்கு வழங்க வேண்டிய வரலாற்று பொறுப்பு ஏற்பட்டுள்ளது. இதனை எப்படி பார்க்கிறீர்கள்?
இந்த நடவடிக்கை அத்தியாவசியமானது. புலம்பெயர் வாழ் நாடுகளில் உறவுகள் வசித்து வருகின்றனர். எங்களிடம் தங்களது உறவுகள் குறித்து நலம் விசாரிக்கின்றனர். அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக இந்த தகவல்களை பெற்றுக்கொள்ளவதற்கு நாங்கள் முயற்சித்தபோதும் அதற்கு சிறிலங்கா அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.
எனவே அடுத்த கட்டமாக சட்ட நுணுக்கங்களை ஆராய வேண்டிய தேவை உள்ளது. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நான் இது குறித்து பேசியுள்ளேன். அவர்களும் இதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகளிடமும் இது குறித்த உதவிகளை நான் கேட்டிருக்கிறேன். சில அரசாங்கங்களுடனும் இது குறித்து பேசி வருகின்றேன். முடிந்தவரை அவற்றை வெகுவிரைவில் செய்யவேண்டும் என்று விரும்புகின்றேன்.
ஆனால், அதற்கு முன்னர் எமது மக்கள் பசியால் வாடவோ அன்றி உணவின்றி இறப்பதையோ நாங்கள் அனுமதிக்க முடியாது. ஏற்கனவே அவர்கள் பட்ட துன்பம் போதும். இனியாவது அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுங்கள்.
எனது அன்பு உடன் பிறப்புகளே! அனைத்துலக நாடுகளில் வாழும் தமிழ் மக்களே!!
அங்குள்ள உறவுகளுக்கு ஒரு நம்பிக்கையை கொடுங்கள். அதுவே அவர்களை வாழ வைக்கும்.
நாங்கள் எந்த உதவியை செய்வதானாலும் சிறிலங்கா அரசுடன் ஊடாகவே மேற்கொள்ளவேண்டியுள்ளது. மாறாக எமது மக்களை இந்த உதவிகள் நேரடியாகச் சென்றடையக் கூடிய பேச்சுவார்த்தைகள் எதையாவது நீங்கள் மேற்கொள்கின்றீர்களா?
சிறிலங்கா அரசு இந்தப் போரில் ஒரு வெற்றியைக் கண்டிருப்பது உண்மை. ஆனால், அவர்கள் அனைத்துலக நிறுவனங்களை அங்கே அனுமதிக்க தயங்குகின்றனர். எமது மக்களுக்கு நேரடியாக பொருட்கள் அங்கு அனுப்பப்பட முடியாவிட்டாலும் - இந்திய அரசாங்கத்துடனும் தமிழக முதல்வருடனும் இது குறித்து கதைத்துக் கொண்டிருக்கின்றோம்.
எனவே எந்த வழியில் சென்றாலும் அது மக்களை சென்றடைந்தால் அது போதும் என்றே நான் கருதுகின்றேன்.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை பொறுத்தவரை அனைத்துலக நாடுகள் தமிழ் மக்களை கைவிட்டுவிட்டன என்று கருதலாமா?
அனைத்துலக நாடுகள் சிறிலங்கா அரசுக்கு ஓரளவுக்கு அழுத்தமும் கொடுத்திருக்கின்றன. எனினும் சீனா, ரஸ்யா, ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் ஆசியுடன் இந்த நாடகத்தை சிறிலங்கா அரசாங்கம் ஆடி முடித்திருக்கிறது.
மக்களுக்கான தீர்வு குறித்து ஏதாவது சிந்தனைகள் உள்ளதா?
எமது இனம் மானத்துடனும் கௌரவத்துடனும் வாழ்வதற்கு ஒரு தீர்வு அவசியம். இது குறித்து நாம் எமது பலதரப்பட்ட பிரிவினர்களுடன் கதைத்துக் கொண்டிருக்கின்றோம். எமது மக்களின் அரசியல் அபிலாசையை ஓரளவுக்கேனும் நிறைவேற்றக்கூடிய திட்டத்தை செயலாற்ற வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். விரைவில் இது குறித்த முழு விபரமும் வெளியிடப்படும்.
அனைத்துலகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்தும் எந்தவகையிலான முயற்சிகளை நீங்கள் எடுக்கின்றீர்கள்?
அனைத்துலக நாடுகளில் உள்ள தமிழ்மக்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது யாதெனில் - பாரிய சுமைகளை எல்லாம் எமது தோளில் மட்டும் சுமத்தாதீர்கள். ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் உரிய கடமை அது. அந்தந்த நாடுகளில் அந்தந்த அரசுகளுடன் நல்ல உறவைப் பேணும்படி கேட்டுக்கொள்கின்றேன்.
இந்திய அரசாங்கத்தின் கவனத்தை எம்பக்கம் திருப்பும் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா?
முதல் வேலையாக அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த வேலைகளை தொடர்ந்தும் செய்துகொண்டிருக்கின்றோம். சிறிது கால அவசகாசம் தேவைப்படுகின்றது. இது குறித்த மேலதிக விபரங்களை தற்போது வெளிப்படுத்த முடியாது.
நீங்கள் தற்போது முழுக்கவனத்தையும் செலுத்தியிருக்கும் விடயம் எதுவென கூறமுடியுமா?
இராணுவ முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் எமது உறவுகளைக் காப்பாற்றுவதற்கும் பிடிபட்ட போராளிகளை அனைத்துலக சட்டத்திற்கு அமைவாக நிறுத்த வேண்டும் என்றும் அரசியல் தீர்வு குறித்தும் நாம் அதிக கவனம் செலுத்துகின்றோம்.
பிளவுகளை மறந்து அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரு குடையின்கீழ் அரசியல் தீர்வுக்காக நிற்க வேண்டும். அதுதான் எனது விருப்பம். அதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் எடுத்து வருகின்றேன்.
புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் துயருக்கும் சோர்வுக்கும் மத்தியிலும் தொடர்ச்சியாக போராட்டம் நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து எவ்வாறு பார்க்கிறீர்கள்?
நாம் கனவில் கூட எண்ணியிராத ஒரு சூறாவளி எமது இளம் தலைமுறையை அடித்து சென்றுவிட்டது. அதில் இருந்து மீள்வதற்கு நாங்கள் மிகவும் கடுமையாக உழைக்க வேண்டிய காலம் இது.
கவனயீர்ப்பு போராட்டங்களின் ஊடாக அந்தந்த நாடுகளில் உள்ள ஊடகங்கள் மற்றும் மக்களுக்கு நாங்கள் என்ன செய்தியை கூற வேண்டும்?
சிறிலங்காவின் படை முகாம்களுக்குள் எமது இனம் படும் சித்திரவதைகளை - எமது தங்கைகளை படையினர் கொடுமைப்படுத்துவதை - எமது இளம் சிறார்கள் பெற்றோருடன் சேரவிடாமல் பிரிக்கப்பட்டிருப்பதை - முதலில் நாங்கள் அனைத்துலகத்தின் கண்களில் நிறுத்த வேண்டும்.
உங்களைப் பற்றிய வதந்திகள் வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக இந்தியாவின 'றோ' உங்களை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதற்கான உங்களது பதில் என்ன?
எமது தேசியத் தலைவருடன் நான் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக, அவருடன் ஆத்ம ரீதியாக கலந்துகொண்டவன்.
இதனை எமது போராட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் அறிந்துகொள்வர்.
எமக்கு இடையில் எந்தவித அப்பழுக்கற்ற நட்பை பேணிக்கொண்டோம்.
இது சாதாரண குடும்ப - மனித - வாழ்க்கைக்கு சற்று மேலான உறவு.
அனைத்துலக இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக என்னை நியமித்த அந்த தலைவருக்கு செய்யப்படும் துரோகமாகத்தான் நான் இதனை எண்ணுகின்றேன்.
எமது தலைவர் எமது மக்களின் இதயங்களில் குடிகொண்டவர்.
நான் பணத்திற்காகவோ அல்லது பதவிகளுக்காகவோ விலைபோகக் கூடியவனாக இருந்தால் என்னை அவர் இந்த பொறுப்பிற்கு நியமித்திருக்க மாட்டார்.
இது எமது போராளிகளுக்கு மட்டுமல்ல, அனைத்துலக நாடுகளுக்கு வந்து வசித்து வரும் போராளிகளுக்கும் தெரியும்.
எனவே எமது தலைவர் அப்படியொரு தவறை செய்ய மாட்டார்.
எனது தலைவர் கூறிய அவரது கனவான -
எமது மக்களுக்கு கௌரவமான, சமனான, மரியாதையுடன் வாழக்கூடிய தீர்வை எடுத்துக்கொடுப்பதற்கு - எனது வாழக்கையை அர்ப்பணித்திருக்கின்றேன்.
சிறிலங்கா அரசு தற்போது தொடங்கியுள்ள போரானது அனைத்துலக நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் கட்டமைப்பை உடைப்பதாகவே உள்ளது. அதுதான் அவர்களின் அடுத்த இலக்கு.
திருமதி அன்ரன் பாலசிங்கத்தை நாடு கடத்துவதற்கும் அவரை துரோகியாக்குவதற்கும் சிறிலங்கா அரசு முயற்சி எடுத்திருக்கின்றது. எனவே அவர்கள் நினைப்பதை செய்வதற்கு தயவு செய்து துணை போகாதீர்கள்.
நாம் கருத்துகளில் வேறுபடலாம். ஆனால் இலட்சியத்தில் ஒன்றுபட்டவர்கள்.
எனவே அன்பு தம்பிகளே! உறவுகளே!!
எனது அண்ணன் விட்டுச் சென்ற கடைமையை தொடர்ந்தும் செய்வோம்.
புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் தற்போதைய நிலையில் கருத்து வேறுபாடுகளை மறந்து தீவிரமான போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து கூற முடியுமா?
நான் ஏற்கனவே கூறியதன்படி இந்த சுனாமியினால் மனம் நொந்திருக்கும் எமது உறவுகள் மீண்டும் எழ வேண்டும். மீண்டும் நாம் எமது கடைமையை ஆற்றுவதற்கு தயாராக வேண்டும். அதனை உடனே செய்ய வேண்டும். காலம் தாமதித்தால் எமது உறவுகள் எமது நாட்டில் மிகவும் கொடுமையான நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
நாம் தாங்கொணா துயரத்தை இதயத்தில் தாங்கிக் கொண்டிருக்கிறோம். எமது நெஞ்சம் வெடிக்கின்றது.
இருந்தாலும் எமது உறவுகளுக்காக நம்பிக்கையுடன் இருக்கின்றோம். புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் அந்த கடைமையை செய்ய வேண்டும். அனைவரும் ஒன்றாக வாருங்கள்.
ஒவ்வொரு நாட்டிலும் வசிக்கும் எமது உறவுகள் ஒன்றுசேர வேண்டும். உங்களுடைய கடைமை பாரியது.
முதற்கட்டமாக அனைவரும் ஒன்றுகூடி எங்கள் உறவுகளைக் காப்பாற்றுவதற்கு நாங்கள் இருக்கின்றோம் என்ற நம்பிக்கையை கொடுங்கள். அந்த நம்பிக்கை அவர்களை வாழ வைக்கும்.
எனவே அதனைச் செய்யுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இன்றைய நிலையில் தமிழ் ஊடகங்களின் பங்கு எந்தளவுக்கு காத்திரமானதாக இருக்க வேண்டும் என்பது பற்றி கூறமுடியுமா?
ஊடகங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அங்குள்ள மக்களை காப்பாற்றுவதற்காக இங்கேயுள்ள மக்களை ஒன்றுதிரட்டும் பணியை இந்த ஊடகங்கள் செய்ய வேண்டும்.
வேறுபாடுகளை மறந்து ஒன்று சேருங்கள். எமது பலத்தை காட்டுங்கள். நாங்கள் ஒன்று சேர்ந்து இங்கு எமது பலத்தை காட்டினால் அங்கேயுள்ள எமது மக்கள் கண்ணீர் சிந்த மாட்டார்கள்.
இந்த ஊடகங்கள் அதனை மிகவும் பொறுப்புடன் செய்ய வேண்டும்.
Tuesday, May 12, 2009
அனைத்துலக சமூகத்தின் கண்களைக் கட்டி ஏமாற்றுவதில் சிறிலங்கா அரசு வெற்றி பெற்றுள்ளது: விடுதலைப் புலிகள்
இது தொடர்பில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
"தமிழர்களுக்கு எதிராக தாம் முன்னெடுக்கும் இனப்படுகொலை போர் தொடர்பான எந்தவொரு உண்மையும் வெளியே தெரியவருவதை தாம் அனுமதிக்கப்போவதில்லை என்பதை பிரித்தானியாவின் 'சனல் - 4' தொலைக்காட்சிக் குழுவினரைக் கைது செய்திருப்பதன் மூலமாக சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக சமூகத்துக்கு உணர்த்தியிருக்கின்றது.
ஊடக சுதந்திரத்தை மீறும் வகையிலான சிறிலங்கா அரசாங்கத்தின் இந்தச் செயற்பாட்டை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். 'சனல் - 4' தொலைக்காட்சிக் குழுவினருக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளையில், இடம்பெயர்ந்த தமிழர்களுக்காக என அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களில் என்ன நடைபெறுகின்றது என்பதை வெளிக்கொணர முயன்ற அவர்களுடைய 'மனிதாபிமானப் பணியை'யிட்டு ஈழத் தமிழர்கள் அவர்களுடைய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.
அனைத்துல சமூகத்தின் கண்களைக் கட்டி ஏமாற்றும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் வெற்றி பெற்றிருக்கின்றது. தன்னுடைய இனப்படுகொலை போரையும் தமிழ் மக்களுடைய அவலத்தையும் சிறிலங்கா அரசாங்கம் வெளி உலகுக்குத் தெரியாமல் மறைத்திருக்கின்றது. வடக்கு - கிழக்குப் பகுதியில் இருந்து வரும் செய்திகளைப் படிக்கும் போது, கேட்கும் போது பார்க்கும்போது வெட்கப்பட வேண்டியிருக்கின்றது.
சிறிலங்கா அரசாங்கமானது தன்னுடைய இனப்படுகொலை போரை தற்போது முழு அளவில் பல முனைகளில் முன்னெடுத்து வருகின்றது. தமிழர்களின் தாயகத்தை ஆக்கிரமித்து அந்த தாயகத்தை இல்லாமல் செய்வதில் இருந்து தமிழ் மக்கள் மீதும் மருத்துவமனைகள் மீதும் பல்குழல் எறிகணை மற்றும் கனரக எறிகணைத் தாக்குதல்களை நடத்துவதன் மூலம் கல்வி மற்றும் வாழ்வாதாரங்களின்றி தமிழர்களைப் பலவீனப்படுத்துவது மற்றும் தடுப்புக்காவல் முகாம்களில் உள்ளவர்களை பூண்டோடு அழிக்கும் நடவடிக்கைகளையும் சிறிலங்கா அரசு தீவிரப்படுத்தியிருக்கும் அதேவேளையில், அனைத்துலக சமூகம் பெரும்பாலும் மெளனமாகவே இருக்கின்றது.
தெரிவு செய்யப்பட்ட சில முகாம்கள் மட்டுமே அனைத்துலக சமூகங்களின் அதிகாரிகளுக்கும் ஊடகங்களுக்கும் காண்பிக்கப்படுகின்றது. மிகவும் மோசமான நிலையில் உள்ள ஏனைய முகாம்கள் உலகத்தின் கண்களில் இருந்தும் காதுகளில் இருந்தும் மறைக்கப்படுகின்றன.
இதனைவிட இடம்பெயர்ந்தவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள 'அதிஉயர் பாதுகாப்பு வலயப் பகுதி'களில் தடுத்துவைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. வவுனியாவை விட இந்தப் பகுதிகளில் தடுத்து வைக்கப்படுபவர்களை பார்வையிடுவது ஊடகவியலாளர்களுக்கு மிகவும் சிரமமானதாகும்.
பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், பட்டினி போடுதல், ஊட்டச்சத்தின்மை, சுகாதாரம் போன்றன தமிழர்களுக்கு எதிரான போரில் சாட்சிகள் இல்லாத ஆயுதங்களாக சிறிலங்கா படையினரால் பயன்படுத்தப்படுகின்றது.
இராஜதந்திர வழிமுறைகளுக்கு அப்பால் சென்று, 'போரற்ற பாதுகாப்பு வலய' பகுதியில் உள்ள மக்களுக்கு வானூர்தி மூலம் நிவாரணப் பொருட்களைப் போடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு உலகின் மனிதாபிமான சமூகத்தை நாம் கேட்டுக்கொள்ளும் அதேவேளையில், சிறிலங்கா படைகளின் நிர்வாகத்துக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெயர்ந்துள்ள தமிழர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் முகாம்களை நடத்துமாறும், அவற்றைக் கண்காணிக்குமாறும் கோருகின்றோம்.''
இவ்வாறு இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, April 8, 2009
சிந்தனைத் துளி
தமிழ்ப்பற்று
குன்றக்குடி அடிகளார் எஸ்.எஸ்.எல்.சி., தேறியவர் இராணுவத்தில் பேருந்து ஓட்டுநராகச் சேர இருந்தார். அவரது தமிழ்ப்பற்று அவரை குன்றக்குடி மடாதிபதி ஆக்கியது.
பதவிக்கு விளக்கம் சொன்ன வள்ளலார்
பசித்திரு!
தனித்திரு!!
விழித்திரு!!!
இதுதான் காமராஜ் பாணி
அரசுக் கல்லூரியில் ஆ.ளுஉ., இயற்பியல் படிக்க ஒரு மாணவருக்கு சிபாரிசு செய்தார் காமராசர். அப்போது அவர் தமிழக முதல்வர். கல்லூரி முதல்வரோ, இயற்பியல் படிக்க 12 பேருக்கு மட்டுமே லேப் வசதி இருப்பதால் , காமராசர் சிபாரிசு செய்த மாணவன் 13ஆவது நபர் என்பதால் செய்வதறியாது கைபிசைந்தார்.
காமராசர் ஒரு யோசனைசொன்னார். 12 பேருக்கு மட்டுமே சமைக்கப் பாத்திரம் இருக்க, திடீரென 22 பேர் விருந்தினர் வந்தால் இரண்டு முறை சமைக்க மாட்டோமா? அப்படிச் செய்யுங்க! - என்றார். இப்படித்தான் கல்லூரி களில் ஷிப்ட் முறை (Shift System) வந்தது?
அப்பனுக்கு அப்பன்!
உலகப் போர் முடிந்து மூவரும் கூடினர்.
சர்ச்சில்: கடவுள் கனவில் தோன்றி நடந்து முடிந்தபோரின் வெற்றிக்கு காரணம் உன் ராஜதந்திரமே என்றார்.
ரூஸ்வெல்ட்: நிச்சயமா அப்படி இருக்க முடியாது. ஏனெனில் கடவுள் என் கனவில் வந்து அமெரிக்கா தந்த போர்க் கருவிகள்தான் வெற்றிக்கு காரணம் என்றாரே!
ஸ்டாலின்: நான் யாருடைய கனவிலும் வரவில்லையே!
பிரபாகரன் மீது துரும்பு விழுந்தால் தமிழ்நாட்டில் இரத்த ஆறு ஓடும்: வைகோ
இலங்கைத் தமிழர் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து சென்னையில் இன்று புதன்கிழமை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் வங்கதேசம் போல தமிழீழமும் மலர்ந்திருக்கும். இந்திரா காந்தியை ஒரு சீக்கியன் சுட்டுக்கொன்றான். அது கண்டிக்கத்தக்கது என்றாலும், அதன் பிறகு நடந்த கலவரத்தில் கிட்டத்தட்ட 7 ஆயிரம் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அந்த வழக்கில் தொடர்புடைய ஜெகதீஸ் டைட்லர் குற்றமற்றவர் என்று மத்திய புலனாய்வுப் பிரிவால் அறிவிக்கப்பட்டுள்ளார். அது தொடர்பாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் ஒரு சீக்கிய செய்தியாளர் வினா எழுப்பியபோது, கிண்டலாக விடையளித்துள்ளார். அதனால் அவர் மீது அந்த சீக்கிய செய்தியாளர் செருப்பை வீசியிருக்கிறார். ஆனால் அந்த செருப்பு அவர் மீது படவில்லை. அதற்காக அகாலிதளம் அந்தச் செய்தியாளருக்கு 2 லட்சம் ரூபா பரிசு அறிவித்திருக்கிறது.
தமிழர்களும் வீரத்திற்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல. முத்துக்குமார் உள்ளிட்டவர்கள் இலங்கைத் தமிழர்களுக்காக தங்களது உயிரைத் தியாகம் செய்திருக்கின்றனர். அதையும்
கொச்சைப்படுத்தியது கலைஞர் அரசு. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அண்மையில் ஒரு மடலை முதல்வர் கலைஞருக்கு அனுப்பியிருக்கின்றார். அந்த மடலில் இதுவரை சொல்லாத இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆறு மாதமாக போர் நிறுத்தம் தொடர்பாக பேசாத சோனியா, இப்போது போர் நிறுத்தம் பற்றி வலியுறுத்துகிறார் என்றால், அம்மடலே தேர்தல் இலாபத்திற்காக கலைஞரால் தயாரிக்கப்பட்டதோ என்ற ஐயம் எழுகிறது.
இலங்கையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மீது சிறு துரும்பு விழுந்தாலும் நாங்கள் துடித்துப் போவோம். அவர் மீது சிறு துரும்பு விழுந்தாலும் தமிழகத்தில் இரத்த ஆறு ஓடும். புலிகளை அழிக்க முடியாது. சில பேர் கணக்குப் போடுகின்றனர். சிலர் கவிதை எழுதியும் வைத்திருக்கின்றனர். ஆனால் இறுதியில் விடுதலைப் புலிகளே வெல்வார்கள் என்றார் வைகோ.
முன்னதாக உரையாற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், இலங்கையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்படுகின்றனர். சிறிலங்கா அரசுக்கு கடன் வழங்குவதற்கு அமெரிக்கா, நோர்வே போன்ற நாடுகள் போர் நடப்பதால் கடன் கொடுக்க முடியாது என்று மறுத்து விட்டன.
ஆனால் வளர்ச்சிக்காக என்று சொல்லி சிறிலங்காவுக்கு கடனை வழங்கிய ஒரே நாடு இந்தியாதான். ஈழத் தமிழர்களுக்காக தமிழர்களாக நாங்கள் போராட்டம் நடத்த வந்தோமே தவிர வாக்கு கேட்பதற்காக அல்ல.
இலங்கைத் தமிழர்களுக்காக அனைவரும் ஒன்றுபட்டு குரல் எழுப்ப வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இலங்கைத் தமிழர்களுக்காக இந்தியா முழுவதும் ஆதரவு திரட்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
பின்னர் உரையாற்றிய தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், ஈழத் தமிழர்கள் நெருக்கடியான நிலையில் இருக்கின்றனர். அங்கு சிங்கள அரசு விச வாயு குண்டுகளையும், இரசாயன குண்டுகளையும் வீசி கொத்துக் கொத்தாக தமிழர்களைக் கொன்று வருகின்றது.
உலக நாடுகள் முழுவதும் ஈழத் தமிழர்களுக்காகப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் நாமும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுகின்றோம். தமிழக மக்கள்
நடுவில் பெரும் எழுச்சி ஏற்படும் வகையில் தொடர்ந்து நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்று அவர் குறிப்பிட்டார்.
Sunday, April 5, 2009
படையினரின் இறுதிக்கட்டத் தாக்குதல் திட்டம் - பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலையாகும் அபாயம்..
களமுனையில் உள்ள முக்கிய மூத்த தளபதிகளும் இராணுத் தளபதியுடனான இந்தச் சந்திப்புக்காக நேற்று அவசரமாக வவுனியாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இராணுவத் தளபதியுடனான ஆலோசனைகளையடுத்து களமுனைத் தளபதிகள் உடனடியாகவே முல்லைத்தீவுப் பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
Friday, April 3, 2009
இந்திய கடற்றொழிலாளர்கள் 23 பேர் சிறிலங்கா கடற்படையால் கைது
சிறிலங்கா கடற்பரப்புக்குள் அத்துமீறிப் பிரவேசித்து சட்டவிரோதமான முறையில் மீன் பிடிப்பதில் ஈடுபட்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் சிறிலங்கா கடற்படையின் பதில் பேச்சாளர் மகேஷ் கருணாரட்ன நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
வழமையான சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரே இவர்களைக் கைது செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பிட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 23 பேரும் ஆறு படகுகளில் சிறிலங்காவுக்குச் சொந்தமான கடற்பரப்புக்குள் அத்துமீறிப் பிரவேசித்து மீன் பிடித்துக்கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்திய கடற்றொழிலாளர்கள் 23 பேரும் பயன்படுத்திய ஆறு படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
வழமையான விசாரணைகளின் பின்னர் இந்திய உயர் தூதரகத்தின் மூலமாக இவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் கடற்படைப் பதில் பேச்சாளர் தெரிவித்தார்.
இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு - ஹிலாரி கிளின்டன்
கடந்த மார்ச் 9ஆம் திகதி இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து மேரி ஜோய் கில்ரோய் விளக்கம் கோரி கடிதம் ஒன்றை ஹிலாரி கிளின்டனுக்கு அனுப்பியிருந்தார்.
இலங்கையில் நிரந்தர சமாதான தீர்வு ஏற்பட்டு அனைத்து சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு ஏற்படுவதையே அமெரிக்கா விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
இலங்கை அரசாங்கத்திடம் சமாதான தீர்வை வலியுறுத்தும், தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கு அனுமதியளிக்குமாறும் வன்முறைகளை நிறுத்துமாறும் கோரியுள்ளதாக ஹிலாரி கிளின்டன் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு பொது மக்கள் தங்கியிருக்கும் பிரதேசங்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தக் கூடாது என்பதை வலியுறுத்தியதாகவும் தமது கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கு சர்வதேச உதவு நிறுவனங்கள், உதவி வழங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்பதையும் தாம் இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ராஜாங்க திணைக்களமும், இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகமும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து வன்னியில் போரினால் சிக்குண்ட மக்களுக்கு உதவிகளைச் செய்து வருகின்றன.
அத்துடன் இடம்பெயர்ந்து மக்களின் முகாம்களுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமையம் என்பவற்றின் முழுமை நிவாரணங்களையும் இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என கடித்தில் தெரிவித்துள்ளார்.
Sunday, March 29, 2009
பொது இடத்தில் எச்சில் துப்பினால் நாடு கடத்தல்!
பொது இடங்களில் எச்சில் துப்பினால் நாடு கடத்தப்படுவீர்கள் என்று வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு துபாய் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தான், இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் இருந்து வரும் தொழிலாளர்கள் வெற்றிலையை போட்டு குதப்பும் பழக்கம் கொண்டுள்ளனர்.
இவர்கள் வெற்றிலையை மென்று புளிச், புளிச் என்று கண்ட இடங்களில் துப்பி வைத்து விடுகின்றனர். இதனால் பொது இடங்கள் பலவற்றில் சிவப்பு கறைகள் பெருமளவில் தென்படுகின்றன.
நகரமே அசிங்கமாகி விடுகிறது. சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இந்நிலையில், இந்த செயலை தடுப்பதற்காக துபாயில் அதிரடி திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி பொது இடங்களில் வெற்றிலையை மென்று எச்சில் துப்புபவர்களை பிடித்து அவர்களின் சொந்த நாட்டுக்கு, உடனடியாக நாடு கடத்திவிட துபாய் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பும் முறைப்படி வெளியிடப்பட்டுள்ளது. துபாயில் யாரும் வெற்றிலை சாப்பிடுவதில்லை.
ஆசிய நாடுகளில் இருந்து வரும் தொழிலாளர்கள்தான் இந்த பழக்கத்தை தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் பரப்பி விட்டுள்ளனர். பொது இடங்கள் அசிங்கம் ஆவதை தடுக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளத
வருண்காந்தி மீது தே.பா.சட்டம் பாய்ந்தது
வருண்காந்தி மீது தேசியபாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. உத்திரபிரதேச போலீசார் அதிரடியாக இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிறுபாண்மையினருக்கு எதிராக பேசியதாக ஏற்கெனவே வருண்காந்தி சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பிரசாரத்தின்போது வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக உத்தரபிரதேசம் போலீசார் வருண்காந்தி மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அவர் பீலிபட் கோர்ட்டில் ஆஜர் ஆனார்.
அவரை முறைப்படி கைது செய்தனர். பின்னர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அது நாளை விசாரணைக்கு வருகிறது. ஜாமீன் கிடைத்தால் நாளை விடுவிக்கப்படுவார். இல்லை என்றால் மேலும் சில நாட்கள் ஜெயிலில் இருக்க வேண்டியது வரும்.
வருண் காந்தி நேற்று கோர்ட்டில் ஆஜர் ஆவதற்காக பாரதீய ஜனதா தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தார். இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
வருண் காந்தியை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். சாலை மறியல் செய்ததுடன் போலீசார் மீது கல்வீசி தாக்கினார்கள். இதனால் போலீசார் தடியடி நடத்தியதுடன் துப்பாக்கி சூடும் நடத்தினார்கள்.
வன்முறை நடந்ததால் உத்தரபிரதேச முதலமைச்சர் மாயாவதி கடும் கோபம் அடைந்துள்ளார். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
வருண் காந்தியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வது குறித்தும் அவர் ஆலோசித்து வருகிறார்.
இது தொடர்பாக அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில் சட்டத்தை யாரும் கையில் எடுத்துக்கொள்ள அனுமதிக்க முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால் பீலிபட் மாவட்ட கலெக்டர் இதுபற்றி கூறும்போது வருண்காந்தியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறினார்.
இந்நிலையில் வருண்காந்தி மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
வன்னியில் இன்று 16 சிறுவர்கள் உட்பட 49 தமிழர்கள் படுகொலை
வன்னியில் மக்கள் வாழ்விடங்களை நோக்கி சிங்கள படையினர் இன்றும் நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 16 சிறுவர்கள் உட்பட 49 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 125 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வலைஞர்மடத்தில் உள்ள மக்கள் வாழ்விடங்களை நோக்கி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 18 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தளன் பகுதியை நோக்கி இன்று சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதில் 8 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அம்பலவன்பொக்கணையில் உள்ள பிள்ளையார்கோவில் பகுதியை நோக்கி இன்று சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதில் 10 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
முள்ளிவாய்க்கால், இடைக்காடு மற்றும் பச்சைப்புல்மோட்டைப் பகுதிகளை நோக்கி இன்று சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதில் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அனைத்து பகுதிகளிலும் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 125 பேர் படுகாயமடைந்துள்ளனர்
சன் தொலைக்காட்சியின் „அயன்“ திரைப்படத்தை புறக்கணிப்போம்!
அன்பான தமிழ் மக்களே
தமிழீழ மக்கள் மீது சிறிலங்கா அரசு கொடிய போரை ஏவி விட்டுள்ளது. தினமும் பல நூற்றுக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்தக் கொடிய இன அழிப்பு யுத்தத்தை இந்தியாவின் காங்கிரஸ் அரசு வழி நடத்தி வருகின்றது.
இந்த நிலையில் சிறிலங்காவின் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டத்தை எமது மக்கள் தன்னெழுச்சியோடு முன்னெடுத்து வருகின்றார்கள். அதே வேளை சிறிலங்கா அரசுக்கு முண்டு கொடுத்து யுத்தத்தை வழிநடத்தும் காங்கிரஸ் அரசின் செயற்பாடுகளை ஆதரிக்கும் தமிழ் நாட்டு ஊடகங்களுக்கும் எமது எதிர்ப்புகளை நாம் தெரிவிக்க வேண்டும்
தமிழ் நாட்டின் முக்கிய தொலைக்காட்சிகளான சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகள் புலம்பெயர் நாடுகளிலும் தமது ஒளிபரப்பை நடத்தி வருகின்றன. இந்தத் தொலைக்காட்சிகள் தமிழர்களுக்கு எதிரான செய்திகளை காவி வருவதோடு, தமிழின எதிரிகளை நியாயப்படுத்தும் செய்திகளையும் வெளியிட்டு வருகின்றன.
எமது மக்களின் அவலங்களை வெளிப்படுத்த வேண்டிய கடமையுள்ள தமிழ் ஊடகங்கள் எமது மக்களை அழிப்பவர்களுக்கு வக்காலத்து வாங்குவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தத் தொலைக்காட்சிகளுக்கு நாம் எமது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.
சன் தொலைக்காட்சி "சன் பிக்ஸர்" என்ற பெயரில் திரைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றது. இந்தத் திரைப்படங்கள் வெளிநாடுகளில் திரையிடப்படுவதன் மூலம் பல கோடி ரூபாய் லாபத்தை சன் தொலைக்காட்சி பெறுகின்றது. எமக்கு எதிரான செய்திகளை வெளியிட்டுக் கொண்டு, எம்மிடம் இருந்தே பெருந் தொகை வருவாயையும் பெறுகின்றது.
சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி போன்றவற்றையும் இவைகளின் சார்பில் வெளிவரும் திரைப்படங்களையும் புறக்கணித்து நாம் எமது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.
சன் தொலைக்காட்சியின் வெளியீடாக அடுத்து வரவுள்ள "அயன்" திரைப்படத்தை புறக்கணித்து நாம் எமது எதிர்ப்பை தெரிவிப்போம். இந்தத் திரைப்படத்தை புலம்பெயர் நாடுகளில் திரையிட வேண்டாம் என்று சம்பந்தப்பட்டவர்களை நாம் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
இந்த நடவடிக்கை அயன் திரைப்படத்தில் நடிப்பவர்களுக்கோ, தமிழ் திரையுலகத்திற்கோ எதிரானது அன்று என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இன்றைக்கு எமக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் தமிழ் திரையுலகத்திற்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ரஜனிகாந்தின் ரசிகர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான கட்சிகளுக்கே வாக்களிப்பதாக தீர்மானித்துள்ளதையும் நாம் மிகவும் பாராட்டி அவர்களுக்கும் எமது அன்பான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
"அயன்" திரைப்படப் புறக்கணிப்பு என்பது சன் குழுமம் மற்றும் கலைஞர் குடும்பத்திற்கு எமது அதிருப்தியையும், வேதனையையும், கோபத்தையும் தெரிவிக்கும் ஒரு நடவடிக்கையே தவிர வேறு யாருக்கும் எதிரானது அன்று.
சன் மற்றும் கலைஞர் குழுமத்தின் இன்றைய நிலைப்பாட்டிற்கு எமது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் வண்ணம் சன் தொலைக்காட்சியின் "அயன்" திரைப்படத்தை புலம்பெயர் நாடுகளில் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும்படி அனைத்து தமிழ் மக்களையும் உரிமையோடும் அன்போடும் வேண்டிக் கொள்கிறோம்.
ஒற்றுமையே வலிமை
வலிமையே வாழ்வு
தமிழர் விழிப்பு இயக்கம்
தொடர்புகளுக்கு: thamilarvilippuiyakkam2009@gmail.com
தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் நாளுக்குள் முற்றாக அழித்து விடுமாறு இந்திய ஆளும் கொங்கிரஸ் கட்சி சிறீலங்கா அரசுக்கு உத்தரவு..
தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்வரும் ஏப்ரல் 14ஆம் நாளுக்குள் முற்றாக அழித்து விடுமாறு இந்திய ஆளும் கொங்கிரஸ் கட்சி சிறீலங்கா அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 16ஆம் நாள் முதல் மே 13ஆம் நாள்வரை நடைபெறவுள்ள நிலையில், இந்த உத்தரவை சிறீலங்கா அரசுக்கு கொங்கிரஸ் கட்சி பிறப்பித்திருப்பதாக, கொங்கிரஸ் கட்சியின் நம்பகமான உள்ளக வட்டாரங்கள் மூலம் தமிழ்நாட்டில் தகவல் கசிந்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதன்மூலம், அடுத்த தேர்தலில் தாம் வெற்றிபெற முடியும் என கொங்கிரஸ் கட்சி திடமாக நம்புவதால், இந்த காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு தமிழ்நாட்டில் ஆட்சியிலுள்ள தி.மு.க கட்சி உடந்தையாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மற்றொரு பிரதான கட்சியான ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க, இடதுசாரி மற்றும் பொதுவுடமைக் கட்சிகளுடன் நெருங்கிய உறவைப்பேண ஆரம்பித்திருப்பதாலும், ஈழ ஆதரவுக் கட்சிகளும் இந்தக் கூட்டணியில் இணைந்து கொள்ளலாம் என்பதாலும், கொங்கிரசுடன் இணைந்திருப்பதே தமக்கு தேர்தல் வெற்றியை ஈட்டித்தரும் என எண்ணும் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க, ஈழத்தில் தமிழினப் படுகொலையைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாக, தமிழ்நாட்டிலுள்ள தமிழின உணர்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.
வரலாற்றுச் சுருக்கம்
ஈழத்தமிழர்களாகிய நாம் இன்று தனித்துவங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டு எஞ்சியுள்ள தனித்துவத்தினை பேணிப்பாதுகாப்பதில் முன்னின்று செயற்படும்இக்காலகட்டத்தில் எமது வரலாறு பற்றி எழுதுவதும் அவற்றைப் படிப்பதும் அறிவது அவசியமாகிறது. எனவே எமதுஇந்த முயற்சிகள் ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு எமது தொன்மையான வரலாறு பற்றியும்.அதில் எமது தனித்துவம் பற்றியும் அதன் தார்ப்பரியம் பற்றியும் உணரக்கூடியதாக எடுத்தியம்பும் என நினைக்கிறோம்.
ஈழத்தமிழரை பொறுத்தவரையில் எங்களுடைய வரலாறு என்பது மிகத்தொன்மையானது பல நூற்றான்டு காலம் தொடர் வரலாற்றைக் கொண்டதுமாகவே காணப்படுகிறது. வரலாறு என்பது மிகத்தொன்மையானது பல நூற்றாண்டு காலம் தொடர் வரலாற்றை கொண்டதுமாகவே காணப்படுகிறது. வரலாறு என்பது எழுதப்படுவதற்கு முன் நிலவிய குறுனிக் கற்கால பண்பாட்டுடன் ஆரம்பமாகி பெருங்கற்காலப் பண்பாடு கதிரமலை அரசு சிங்கைநகர் அரசு என இருந்த போதும் கி.பி 09ம் நூற்றாண்டில் இருந்து 13ம் நூற்றாண்டுவரை சோழர்களின் ஆட்சியில் இவர்களை அடுத்த 13ம் நூற்றாண்டில் இருந்து யாழ் இராச்சியம் ஊடாக ஒரு தொடர் வரலாற்றைக் கொண்டிருந்த மக்களாகவே ஈழத்தமிழருடைய வரலாறு அமைகிறது.
நீண்டகாலமாக தமக்கென இலங்கைத்தீவில் வடக்கு-கிழக்கைக் கொண்ட ஒரு தாயகப் பிரதேசத்தைத் தன்னகத்தே கொண்டிருந்த போதும் இதில் தமெக்கென ஓர் அரசை உருவாக்கி ஈழத்தமிழரிடையே அரசியல் பொருளாதார சட்டதிட்டங்களை மற்றும் தலைவிதியையும் நீண்டகாலமாகவே தீர்மானித்து வந்தார்கள். இதன் நிமித்தம் தேசிய விழுமியங்கள் நன்கு வளர்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டுமே வந்துள்ளது.
19ம் நூற்றாண்டின் பின் ஈழத்தமிழரின் வடக்கு கிழக்கு இணைந்த தாயகப்பகுதியும் மற்றும் அரசுரிமையும் ஏகாதிபத்தியங்களின் கைகளுக்கு மாறியதும் தேசிய விழுமியங்கள் படிப்படியாக சிதைக்கப்பட்டு இறுதியில் தாயகப்பகுதியும் சிங்கள தேசத்தோடு இணைக்கப்பட்டதோடு ஈழத்தமிழர் தனது தன்னாட்சி உரித்தை முற்று முழுதாக இழந்தனர். அது மட்டுமல்லாமல் ஆங்கிலேயர் ஈழத்தமிழரின் அரசியல் தலை விதியை சிங்கள ஆட்சியாளர்களின் கைகளில் கையளித்தே இன்று ஈழத்தமிழர்கள் இழந்த தமது தன்னாட்சி உரித்தை வென்றெடுக்கவே ஓர் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுத்து செல்கின்றன.
Tuesday, March 24, 2009
கனடாவில் சிறிலங்காப் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம்..
சிறிலங்காவில் இருந்து இறக்குமதியாகும் உற்பத்திப் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம் கனடாவின் ரொறன்ரோ வாழ் தமிழ் இளையோர்களால் நேற்று முன்நாள் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
சிறிலங்கா அரசின் தமிழினப் படுகொலைக்கு எதிராக முன்னெடுக்கும் போராட்டங்களின் தொடர்ச்சியாகவே இப்புறக்கணிப்புப் போராட்டமும் நடைபெற்றது.
சிறிலங்காவினால் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் முக்கிய நுகர்வாளர்களாக இருப்பவர்கள் புலம்பெயர் வாழ் தமிழர்கள்.
தமிழர்களை இன அழிப்புச் செய்யும் சிறிலங்காவின் பொருட்கள், சேவைகளை நுகர்வதன் மூலம் தமிழர்களை அழிப்பதற்கான நிதியினை சிறிலங்கா அரசுக்கு வழங்கிக் கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலேயே 'சிறிலங்காவைப் புறக்கணிப்போம்' என்னும் இப்போராட்டம் நடத்தப்பட்டது.
பிற்பகல் 1:00 மணியளவில் தொடங்கிய இப் புறக்கணிப்புப் போராட்டத்தில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டிருந்தது.
அங்கு நிலத்தில் விரிக்கப்பட்டிருந்த சிறிலங்கா நாட்டின் கொடியின் மேல் மக்களால் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட உற்பத்திப் பொருட்கள் கொட்டப்பட்டு பின்னர் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
அத்துடன் அங்கு நின்றிருந்த மக்கள் அனைவரும்
- சிறிலங்காவைப் புறக்கணிப்போம்
- சிறிலங்கா பொருட்களைப் புறக்கணிப்போம்
- சிறிலங்காவின் சேவைகளைப் புறக்கணிப்போம்
எமது மக்களை நாம் பாதுகாப்போம் என்று உறுதி எடுத்துக்கொண்டனர்.
Saturday, March 21, 2009
விடுதலைப் புலிகளின் கொடியினை தாங்கிச் செல்வது சட்டபூர்வமானது: கனடா
தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பு கனடாவில் தடை செய்யப்பட்டுள்ள போதும் அவர்களின் கொடியினை தாங்கிச்செல்வது சட்டபூர்வமானது என கனடா நாட்டின் காவல்துறை தெரிவித்துள்ளதாக கனேடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் இடம்பெற்று வரும் மோதல்களை நிறுத்துமாறு கோரி கனடாவில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் போராட்டங்களில் அண்மையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது பெண்களும், சிறுவர்களும், ஆண்களும் விடுதலைப் புலிகளின் கொடியினை வெளிப்படையாக அசைத்து தமது ஆதரவுகளை தெரிவித்திருந்தனர்.
அங்கு தனிநாடு கோரி வரும் விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடி அதுவாகும்.
இதனைத்தொடர்ந்து, கனடாவில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் கொடியினை தாங்கிச் செல்வது சட்டபூர்வமானதா என ஆராயப்பட்டது.
ஆனால், அது சட்டவிரோதமற்றது என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் மார்க் போகேஷ் தெரிவித்துள்ளார்.
எமது வழக்கறிஞர்களிடம் இருந்து நாம் ஆலோசனைகளை பெற்றுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என் உயிருக்கு பாதுகாப்பு கொடுத்தவர்கள் விடுதலைப்புலிகள்தான்:வைகோ
மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத், பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி, இயக்குனர் சீமான் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்த தமிழக அரசை கண்டித்து கோவை மாவட்ட ம.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்றுக்காலை 10 மணி அளவில் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டத்துக்காக ஒரு லாரியில் தற்காலிக மேடை அமைக்கப்பட்டு இருந்தது.
கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர்,
’’உலக நாடுகள் கொடுக்கும் ஆயுதங்களையெல்லாம் வாங்கிக் கொண்டு ஈழ தமிழர்களை அழித்து வரும் இலங்கை ராணுவத்தை எதிர்த்து எந்த நாடும் உதவி செய்யாத நிலையிலும் போராடி வரும் விடுதலைப்புலிகளை ஆதரித்தார் என்பதற்காக நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதே போல எங்களையும் சிறையில் அடைத்து நிராயுதபாணியாக்கி தேர்தலை சந்திக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நான் பேசினேன். நான் பேசியதை இங்குள்ள நூற்றுக்கணக்கானவர்கள் திருப்பி சொல்லியுள்ளனர். எனவே இவர்கள் அனைவரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வீர்களா?
அப்படியென்றால் ஒட்டு மொத்த தமிழகத்தையும் சிறைச்சாலை ஆக்குவீர்களா?. தமிழகத்தில் தேசிய பாதுகாப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது. மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் பரவாயில்லை. தமிழனத்துக்கு துரோகம் செய்யும் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சிக்கு வரக்கூடாது.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக் கோரி பொதுமக்களிடம் கையெழுத்து வாங்குங்கள். அதனை வாங்கி ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபைக்கு அனுப்பலாம்.
ஐக்கிய நாடு பாதுகாப்பு சபையினால் மட்டுமே இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய முடியும். ஆனால் அந்த சபையில் தீர்மானம் கொண்டு வர விடாமல் இந்தியா தடுக்கிறது.
புலிகளை அழிக்கும் வரை போர் நிறுத்தம் கிடையாது என்று ராஜபக்சே கூறுகிறார். ஆனால் விடுதலைப்புலிகளை அழிக்க முடியாது. அவர்களை நெருங்க கூட முடியாது.
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இங்கு இவ்வளவு பேர் கூடியிருக்கிறீர்கள். கோவை மாவட்டத்தில் ம.தி.மு.க. பலவீனமடைந்து விட்டது என்று யாரோ சொல்கிறார்கள். ஆனால் இங்கு கூடியிருக்கும் கூட்டத்தை பார்த்து அவர்கள் புரிந்து கொள்ளட்டும்.
பிள்ளை பிடிக்கிற கூட்டம் போல ஆட்களை பிடிக்கிறார்கள். 1993-ல் எங்களோடு வந்தவர்களுக்கு பதவி தருகிறோம் என்று நாங்கள் சொல்லவில்லை.
என்னை கள்ளத்தோணியில் சென்று வந்தவன் என்றும், உயிர் பிச்சை கொடுத்ததாகவும் முதல்-அமைச்சர் சொல்கிறார். ஆனால் உண்மையில் என் உயிருக்கு பாதுகாப்பு கொடுத்தவர்கள் விடுதலைப்புலிகள் தான்.
சுற்றி நின்று தாக்குதல் நடத்திய போதிலும் என்னை பாதுகாத்து அனுப்பி வைத்தவர்கள் விடுதலைப்புலிகள். அவர்களில் சரத் என்கிற பீட்டர் கென்னடி என்பவரும் ஒருவர். அவருடைய பெயரை தான் நாஞ்சில் சம்பத் தனது மகனுக்கு வைத்துள்ளார்’’ தெரிவித்துள்ளார்.
Friday, March 13, 2009
ஆட்லறிப் படைத் தள அழிப்பில் வீரச்சாவைத் தழுவிய கரும்புலிகளுடன் தமிழீழத் தேசியத் தலைவர்
ஆட்லறிப் படைத் தள அழிப்பில் வீரச்சாவைத் தழுவிய கரும்புலிகளுடன் தமிழீழத் தேசியத் தலைவர்
கரும்புலி மேஜர் தமிழ்மாறன்
கரும்புலி கப்டன் கதிர்நிலவன்
கப்டன் ஈழவிழியன்
கப்டன் காலைக்கதிரவன்
கப்டன் கலையினியவன்
ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
தூரிகைகளின் துயரப்பதிவுகள்
சென்னையில் கருத்துரிமைக் களம் என்கிற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த 'தூரிகைகளின் துயரப்பதிவுகள்' என்னும் தூரிகைப் போராட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான ஓவியர்கள் போருக்கு எதிராக ஓவியங்களை வரைந்தார்கள்.
சென்னையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில் பிரபல ஓவியர்கள், ஓவியக்கல்லூரி மாணவர்கள், பிரபல கேலிச்சித்திரம் வரைபவர்கள், காட்சி ஊடக மணவ மாணவிகள், எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள், கவிஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பிரபல கேலிச்சித்திரம் வரைவபரான மதன் நிகழ்வினை தொடக்கி வைக்க, சென்னை ஓவியக்கல்லூரி முதல்வரும் ஓவியருமான சந்துரு ஓவியம் வரைந்தார். பிரபல ஒவியர்களான வீரசந்தானம், மணியன் செல்வம், அரஸ், மாருதி, விஸ்வம், ஸ்யாம், மனோகர், நெடுஞ்செழியன், போன்ற பல பிரபல ஓவியர்களும் தங்கள் உணர்வுகளை ஓவியமாக வெளிப்படுத்தினார்கள். வரைந்து முடிந்த ஓவியங்களை பொதுமக்களின் பார்வைக்கு வைத்த போது பலரும் வந்து பார்த்து மனம் கலங்கிச் சென்றனர்.
இந்த ஓவியங்களை தியாகி முத்துக்குமார் நினைவோடு இணைத்து தமிழகம் எங்கும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கவும் ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூரிகைப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை வாழ்த்தி உரையாற்றிய போது திரைப்பட பாடலாசிரியர் தாமரை தெரிவித்துள்ளதாவது:
"இவ்வளவு எதிர்ப்புக்கள் இருந்தும் இன்னும் இந்தப் போரை இலங்கை பேரினவாதிகள் நடத்துகிறார்கள் என்றால் அது இந்தியா கொடுக்கிற ஆதரவில்தான்.
இந்த லட்சணத்தில் இந்திய இறையாண்மை தொடர்பாக வாய் கிழியப் பேசுகிறார்கள் இவர்கள். இந்திய இறையாண்மைக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு வேட்டு வைக்கின்றது அதுதான் உண்மை.
வன்னியில் இரண்டு லட்சம் மக்கள் இருக்கிறார்கள் என்று சொன்ன பேரினவாதிகள் இப்போது எழுபதாயிரம் மக்கள் மட்டுமே இருப்பதாகச் சொல்கிறார்கள். அப்படி என்றால் ஒரு லட்சம் மக்களை குண்டு வீசிக் கொல்லத் திட்டமிட்டிருக்கிறர்கள் என்று தானே பொருள்.
தமிழக மக்களுக்கு பதில் சொல்லும் காலம் இன்று வந்திருக்கிறது. ராஜீவ் கொலையால் 18 ஆண்டு காலம் நம்மை தண்டித்தார்கள். இதே 18 ஆண்டு காலம் நாம் காங்கிரசை தண்டிக்க வேண்டும். அதற்கான துருப்புச் சீட்டுதான் இப்போது நம்மிடம் இருக்கிறது" என்று உணர்வுபூர்வமாக உரையாற்றினார் கவிஞர் தாமரை.
கருத்துரிமைக் களத்தின் அமைப்பாளரும் திரைப்பட இயக்குநருமான புகழேந்தி கலந்து கொண்டு உணர்வுகளை வெளிப்படுத்திய ஓவியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
தேர்தல் பிரசாரத்தில் இலங்கை ஆதரவுக்கு தடை : இந்திய தேர்தல் ஆணையம்
கோடீஸ்வர அந்தஸ்தை இழந்த 29 இந்திய தொழிலதிபர்கள்: லட்சுமி மிட்டலை முந்தினார் முகேஷ் அம்பானி
இதுகுறித்து, அமெரிக்காவின் "போர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
உலகின் பணக்காரர்கள் பட்டியலில், இந்தியாவின் முகேஷ் அம்பானி ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு 97 ஆயிரத்து 500 கோடி ரூபாய். இவருக்கு அடுத்த இடத் தில் இந்தியாவின் லட்சுமி மிட் டல் உள்ளார். இவரின் சொத்து மதிப்பு 96 ஆயிரத்து 500 கோடி ரூபாய். கடந்தாண்டு பணக்காரர்கள் பட்டியலில் லட்சுமி மிட்டல் நான்காவது இடத்திலும், முகேஷ் அம் பானி ஐந்தாவது இடத்திலும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இருவரும் பொருளாதார மந்த நிலையால் அதிகளவு நஷ்டமடைந்ததால், கோடீஸ்வரர்கள் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் கடந்தாண்டு ஆறாவது இடம் பெற்ற அனில் அம்பானி, இந் தாண்டு 34வது இடத்திற்கு தள்ளப் பட்டுள்ளார். இவரின் சொத்து மதிப்பு 50 ஆயிரத்து 500 கோடி ரூபாய். இவரின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்சின் மூன்றில் இரண்டு பங்கு ஷேர்கள் சரிந்ததால், இந்தாண்டு மிக அதிகளவில் நஷ்டமடைந்தார்.போன் பேச்சு குறைவு: தொலைபேசி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், பொரு ளாதார நெருக்கடியால், மக்கள் குறைந்த நிமிடங்களே பேசுகின்றனர். மேலும், இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி, பங்குச் சந்தை நெருக்கடி, அதிகரித்து வரும் போட்டி போன்றவற்றால் அனில் அம்பானியின் சொத்து மதிப்பு குறைந்துள்ளது. இவரின் சொத்து மதிப்பு, கடந் தாண்டை விட கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு குறைந்துள்ளது.
ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி : உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்த இந்தியாவின் கே.பி.சிங், தற் போது 98வது இடத்திற்கு தள்ளப் பட்டுள்ளார். கடந்தாண்டு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த இவரின் சொத்து மதிப்பு இந்தாண்டு, 25 ஆயிரம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.உலக கோடீஸ்வரர்கள் கிளப்பிலிருந்து விஜய் மல்லையா, துளசி தாண்டி, ஆனந்த் ஜெயின் உட்பட 29 இந்தியர்கள் வெளியேறியுள்ளனர்.இவ்வாறு "போர்ப்ஸ்' பத்திரி கை செய்தியில் கூறப் பட் டுள் ளது.இந்நிலையில், கடந்த மாதம் இந்திய அரசு, 9 லட்சத்து 53 ஆயிரத்து 231 கோடி ரூபாய்க்கு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தது. இது, நாட்டின் கோடீஸ் வரர்களின் மொத்த சொத்து மதிப் பில் இரண்டு மடங்கு குறைவு.
ஆனால், அமெரிக்க பெடரல் அரசு கடந்த மாதம் 2010ம் ஆண் டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்த பட்ஜெட்டின் மதிப்பு, அமெரிக்க கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பை விட மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்த இழப்பு எவ்வளவு?
*உலகில் உள்ள அனைத்து கோடீஸ்வரர்களுக்கும் ஏற்பட்டுள்ள மொத்த இழப்பு 100 லட்சம் கோடி ரூபாய்.
* கடந்த ஆண்டு 1,125 ஆக இருந்த கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை, தற்போது 793 ஆகக் குறைந்துள்ளது.
* கடந்த 2003ம் ஆண்டுக்கு பின், தற்போது முதல் முறையாக கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை சரிந்துள்ளது.
* உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள பில்கேட்சின் சொத்து மதிப்பு இரண்டு லட்சம் கோடி ரூபாய்.
* முதல் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில், முதலிடத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் கேட்ஸ் உள்ளார். அவரது சொத்து மதிப்பு இரண்டு லட்சம் கோடி ரூபாய். இரண்டாம் இடத்தில் உள்ள அமெரிக்க வாரன் பபெட் சொத்து மதிப்பு 1 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய்.
Thursday, March 12, 2009
அமெரிக்காவே இலங்கையை நம்பாதே. -பழா.நெடுமாறன்.
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் வேலூரில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி பேசுகையில்,
முத்துக்குமார் தொடங்கி இதுவரை 10 பேர் இலங்கை தமிழருக்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித் துள்ளனர். ஆனால், இந்திய அரசு இதுவரை அங்கு போர் நிறுத்தம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இப்பிரச்னையின் விளைவாக நம்மிடையே எழுந்துள்ள இந்த ஒற்றுமை, தமிழர் உணர்வை தொடர்ந்து சரி யான திசையில் கொண்டு செல்ல வேண்டும். இதன் மூலம் இலங்கை தமிழர் மட்டுமல்ல தமிழகத்தின் நீராதார பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கான வேளை இப்போது வந்து விட்டது என்றார்.
இலங்கை தமிழர் பிரச்னையில் அந்நாட்டு அரசு கூறும் வார்த்தையை அமெரிக்கா நம்பக்கூடாது என்றார்.
ஈழத் தமிழர்களுக்கு உணவு - காங்கிரஸ் தேர்தல் நாடகம் ஆரம்பம்
இலங்கை தமிழர்களுக்காக தமிழகத்தில் நிவாரணப் பொருட்களை திரட்ட கொங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாகவும், வரும் 12ஆம் திகதி முதல் நிவாரணப்பொருட்கள் திரட்டப்படும் என்றும் அக்கட்சியின் தமிழக தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.
வைகோவுக்கு பிரதமர் எழுதிய கடிதம்
இலங்கையின் ஒருமைப்பாட்டை காக்க இந்திய அரசு ராணுவ உதவி செய்கிறது:வைகோவுக்கு பிரதமர் எழுதிய கடிதம்
சேலத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நேற்று சேலம் வந்திருந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம்,
’’இலங்கையில் தமிழ் இனத்தை பூண்டோடு அழிக்கும் வேலையில் ராஜபக்சே அரசு இறங்கியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், மருத்துவமனைகள் மீது குண்டுகள் வீசக்கூடாது என்றும் கூறியுள்ளன.
ஆனால் இந்திய அரசு இதுவரை ஏன் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தவில்லை. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு இந்தியாதான் காரணம்.
பிரதமர் மன்மோகன் சிங், கடந்த அக்டோபர் 2ம் தேதி எனக்கு எழுதியிருந்த கடிதத்தில், இலங்கையில் நடக்கும் பிரச்னை உள்நாட்டு விவகாரம். இலங்கையின் ஒருமைப்பாட்டை காக்க இந்திய அரசு ராணுவ உதவி செய்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
ராணுவ உதவிகள் மட்டுமின்றி, பண உதவியும் இந்திய அரசு செய்து வருகிறது’’ என்று தெரிவித்தார்.
கிழக்கில் 49 ஆயிரம் விதவைகள் - மாகாண அமைச்சர் தகவல்
கிழக்கில் இதுவரை 49 ஆயிரம் விதவைகள் உருவாக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 19, 000 பேர் 40 அகவைக்கு உட்பட்டவர்கள் என்றும் 12,000 பேர் மூன்று மற்றும் அதந்கு மேற்பட்ட குழந்தைகளுடன் வாழ்ந்து வருவதாகவும் மாகாணசபை அமைச்சர் ஒருவர் தொவித்துள்ளார்.
போர் சூழ்நிலை காரணமாக இந்த விதவைகளின் வாழ்க்கைத்தரம் மிகவும் மோசமாக உள்ளதாகவும், பெரும்பாலானவர்கள் உள்ளக இடம்பெயர்வுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தொண்டு நிறுவனப் பணியாளர் ஒருவர் பதிவின் மட்டக்களப்பு செய்தியாளருக்கு தொவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மற்றும் ஆயுதக்குழுக்களால் கொல்லப்பட்ட குடும்பங்களுக்கு தொடர்ந்தும் படையினர் மற்றும் ஆயுதக்குழுக்கள் அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும் கூறினார்.
இதனால் அக்குடும்பங்களின் தலைவியரின் மனோநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பலர் தமது குழந்தைகளுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் கவலை வெளியிட்டார்.
அண்மையில் 14 அகவையுடைய சிறுமி ஒருவர் மட்டக்களப்பில் அவரது தாயார் முன்னிலையில் சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட போதிலும், கிழக்கின் முதலமைச்சர் பிள்ளையானோ, அமைச்சர் கருணாவோ இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசியல்வாதிகளின் கையில் சிக்கிய ஈழப்பிரச்சினை
தமிழக அரசியல்வாதிகளின் கையில் சிக்கிய ஈழப்பிரச்சினை படாதபாடு படுகிறது. ஒவ்வொரு கட்சியும் ஈழத்திற்காக உண்மையாக குரல் கொடுப்பதை தவிர்த்து வருகின்றன என்ற போதிலும் அதையே திரித்து தாங்கள் வெட்டிக் கிழிப்பது போல காட்டுவதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்கின்றன.
செத்து விழும் ஈழத்து மக்களின் பிணம் கணக்கின்றி செல்வது போல இவர்களின் நாடகமும் முடிவின்றி செல்கின்றது. தாங்கள் ஈழத்து மக்களை நினைத்து கண்ணீர் உருகுவது போல காட்டுவதற்காக நடத்தப்படும் காட்சிகள் தான் தமிழகத்தின் தற்போதைய அரசியல் மேடையை ஆக்கிரமித்து வருகிறது.அதனால்தான் தன்னெழுச்சியாக வளரும் மக்கள் போராட்டங்கள் எல்லாம் இவர்களின் கைபட்டு நீர்த்துப் போகின்றன.
இந்தியாவின் ஆயுத உதவியும் ஆள் உதவியும் இலங்கை இராணுவத்திற்கு அளவின்றி வழங்கப்படுகிறது என்ற உண்மை இப்போது மக்களுக்கு தெரியும் என்பதால் தி.மு.க கூட்டணி கட்சிகள் அதை மறைப்பதற்கு தேவையான நாடகத்தை நாள்தோறும் நடத்தி வருகின்றன. மத்திய அரசுக்கு தந்தி மனிதச் சங்கிலி பிரணாப் பயணம் மீண்டும் மனிதச் சங்கிலி என்று தொடங்கிய இடத்திற்கே வந்திருக்கிறது தி.மு.கவின் சுற்று அரசியல்.
இதில் வில்லன் பாத்திரத்தை ஏற்றிருக்கும் காங்கிரசு கட்சி கூட ஈழத்திற்காக போராடுகிறது என்று வெட்கமில்லாமல் தங்கபாலுவின் தலைமையில் அறிக்கைகள் விட்டு வருகிறது. ஆனால் இலங்கைக்கு உதவும் மத்திய அரசின் கொள்கை சரியானது என்று மயிலை மாங்கொல்லையில் நடந்த கூட்டத்தில் கொக்கரித்திருக்கிறார் ப.சிதம்பரம். போர் நிறுத்தம் என்ற பெயரில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தரும் எந்த கோரிக்கையையும் வைக்க முடியாது என்றும் அவர்கள் ஆயுதங்களைத் துறந்துவிட்டு சரணடைவு மூலம் பேச வேண்டுமெனவும் வெளிப்படையாக பேசியிருக்கிறார். இதைத்தான் ராஜபக்க்ஷே அரசு பேசி வருகின்றது.
இந்த முகாந்திரத்தில்தான் முல்லைத்தீவில் சிக்கியிருக்கும் மக்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்படுகின்றனர். ஈழத்தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் சிங்கள இனவெறி அரசின் போர் நிறுத்தப் படவேண்டும் என்று நாம் கோரினால் இல்லையில்லை விடுதலைப்புலிகளை வீழத்தும் வரை போர் தொடரும் என்று இனப்படுகொலையை நியாயப் படுத்துகிறார்கள். மேலும் புலிகளை ஒழிப்பது என்ற பெயரில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமும் அழிக்கப்படுகிறது.
ஆயுதங்கள் வைத்திருக்கும் எந்தப் பிரிவினரோடும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு பேச முடியாது என்று சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்குகிறார் ப.சிதம்பரம். ஆனால் இவர்கள் அரசு ஆந்திராவில் மாவோயிஸ்ட்டுகளோடு பேச்சுவாரத்தை நடத்தியதும் எட்டு ஆண்டுகளாக நாக விடுதலைப்படையோடு நாகலாந்தில் பேச்சு வார்ததை நடத்தி வருவதும் எப்படி நடந்தது? இதுதான் நீதி என்றால் பாலஸ்தீனத்து மக்களோடு எவரும் பேச முடியாது என்றாகிறதே? இசுரேல். பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை செய்வதும் ஈராக்கில் அமெரிக்கா அப்பாவி மக்களை கொன்று குவித்து வருவதும் உண்மையாக இருந்தாலும் இவர்களை எதிர்த்துப் போராடும் மக்கள் பிரிவினர் ஆயுதங்களை ஏந்தினால் அது தவறு என்றால் எதுதான் சரி?
பிரச்சினை விடுதலைப்புலிகள் ஆயுதங்களை வைத்திருக்கிறார்களா துறந்தார்களா என்பதல்ல. ஈழத்த் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை அளிக்கப்படவில்லை என்பதுதான் பிரச்சினை. இந்தப் போராட்டத்தில் விடுதலைப் புலிகள் பல தவறுகளை இழைத்திருக்கிறார்கள் என்றாலும் அது ஈழத்து மக்களின் பிரச்சினை. புலிகள் போரை நிறுத்தட்டும் ஈழத்திற்கு சுய நிர்ணய உரிமை அளிக்கிறோம் என்று பேசலாமே? முப்பது ஆண்டுகளாக ஈழத்திற்காக நடந்து வரும் போராட்டம் அகதிகளின் அலைவு எல்லாம் வேலை வெட்டியில்லாமலோ அல்லது ஆயுதங்களை விரும்பித் தூக்கவேண்டும் என்பதற்காகவா நடந்தது?
ஏதோ துப்பாக்கி மீதான காதல்தான் தற்போதைய பிரச்சினைக்கு காரணம் என்பது போல சித்தரிக்கும் கயமைத்தனத்தை என்னவென்பது? ஆக அரசியல் ரீதியாக ஈழத் தமிழ் மக்களின் சுய உரிமைப் போராட்டம் கொச்சைப்படுத்தப்பதுவதோடு புலிகளை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் அம்மக்கள் சொந்த நாட்டிலேயே இலட்சக் கணக்கில் அகதிகளாக அலைவதும் போரில் மாட்டிக்கொண்டு உயிரைத் துறப்பதும் ஊனமாவதும் தான் இதுவரை உலகம் கண்டறிந்திருக்கிறது. இதற்காகத்தான் முத்துக்குமாரும் முருகதாஸூம் மற்றவர்களும் தன்னுயிரை தீயிற்கு இரையாக்கி உலக நாடுகளை போரை நிறுத்துமாறு கெஞ்சுகிறார்கள்.
இவர்கள் யாரும் புலிகளுக்கு ஆயுதம் தூக்கும் உரிமை வழங்கப்படவேண்டும் என்பதற்காக உயிர் துறக்கவில்லை. உயிர் துறக்கும் ஈழத்து மக்களின் அவலத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என்பதற்காகத்தான் தங்கள் உயிர்களை அழித்திருக்கிறார்கள். பல ஆயிரம் பேரை களப்பலி கொடுத்திருக்கும் ஈழத்தின் போராட்டத்தை முடித்து விடுதற்கு இந்தியாவும் இலங்கையும் துடித்துக் கொண்டிருக்கின்றன. அதைத்தான் ப.சிதம்பரத்தின் திமிரான பேச்சு வெளிப்படுத்துகிறது.தமிழகத்தில் இத்தனை பெரிய மக்களின் எழுச்சிக்குப் பிறகும் காங்கிரசு கட்சி தனது துரோகக் கொள்கையை கூட்டம் போட்டு பேசுகிறது என்றால் தமிழ் மக்கள் என்ன இளித்தவாயர்களா?
எதிரிகளைக் கூட போரில் சந்தித்து வெல்ல முடியும். ஆனால் உள்ளிருந்தே துரோகம் செய்யும் இந்தக் கருங்காலிகளை ஈவிரக்கமின்றி வீழ்த்த வேண்டும். அப்போது தான் தமிழ் மக்களுக்கு கொஞ்சமாவது சுரணை இருக்கிறது என்று நீருபிக்க முடியும்.காங்கிரசின் இந்த அடிவருடிக் கொள்கை தான் எல்லாக் கட்சிகளும் வெவ்வேறு அளவுகளில் ஏற்றுக் கொண்டு நடித்து வருகின்றன. கருணாநிதி ஈழத்திற்காக ஒன்றும் செய்யவில்லை. இந்திய அரசின் கொள்கை என்பது கட்சிகளின் நலனுக்கு அப்பாற்பட்டு இந்திய தரகு முதலாளிகளின் நலனுக்காக தீர்மானிக்கப்படுகிறது. இதில் காங்கிரசு ஈழத்திற்கு துரோகம் புரிகிறது. ப.சிதம்பரத்தின் பேச்சை வைத்துப் பார்க்கும் போது அடுத்த தேர்தலில் தமிழ் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள் வந்தால் விளக்குமாறு வரவேற்பு கொடுப்பது பொருத்தமாக இருக்கும்.
சிறீலங்காவின் உண்மை நண்பன் இந்தியா - அமைச்சர் நிமால் பாராட்டு
உலகின் பல நாடுகள் இங்கு நடப்பது தெரியாது எமக்கு பல கட்டளைகள் போடுகின்றது, ஆனால் இந்தியா எமது நிலையை நன்கு புரிந்து கொண்ட நண்பனாக செயற்பட்டு வருகின்றது என சிறீலங்காவின் சுகாதார அமைச்சர் சிமால் சிறீபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து சிறீலங்கா சென்றுள்ள இந்திய இராணுவ மருத்துவக் குழுவினரைச் சந்தித்து அவர்கள் கொண்டு சென்றுள்ள மருந்துப் பொருட்களை பெற்றுக்கொள்ளும் நிகழ்வில் இக்கருத்தை அவர் தொவித்துள்ளார்.
மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில் உலக நாடுகள் பல சிறீலங்காவின் நிலையை புரிந்து கொள்ளாது எம்மை அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே, அதைக்கைவிடு, இதைக்கைவிடு என தொடர்ந்து அழுத்தம் தந்துகொண்டு இருக்கையில் இந்தியா எதுவும் பேசாது தானாக எமக்கு உதவ முன்வந்துள்ளது.
இந்தியா முன்னரும் உதவியுள்ளது. இந்தியாதான் எமது உண்மை நண்பன் அவர்களுக்கு எமது நன்றிகள் என தெரிவித்துள்ளார்.
இதே நிகழ்வில் கருத்து தெரிவித்துள்ள இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத், சிறீலங்கா மற்றும் இந்தியாவின் நெருங்கிய உறவின் வெளிப்பாடே இந்த உதவி எனவும், இதில் இருந்து சிறீலங்கா இந்தியாவிற்கிடையான நெருக்கமான உறவைப்பற்றி புரிந்து கொள்ளலாம் என்றும் கூறினார்.
தமது மருத்துவப்படை எத்தகைய சவால்களையும் சந்திக்கும் வலுப்பெற்றது எனவும், அவர்கள் முழுமையான மருந்து மற்றும் தொழில்நுட்ப வசதிகளை கொண்டுள்ளனர் எனவும் அலோக் கூறினார்.
சிறீலங்காவில் போர் உச்சமடைந்து தமிழர் தாயகப் பகுதிகளில் சிறீலங்கா படைகளின் எறிகணை மற்றும் கொத்துக்குண்டு வீச்சில் சிக்கி தினமும் பல மக்கள் மடிந்து கொண்டுள்ள நிலையில் இந்தியா மருத்துவ உதவிகளை வன்னிக்குள் அனுப்பாது சிறீலங்காவிற்குள் அனுப்பியுள்ளதன் மூலம் தமிழின அழிப்புக்கு முண்டு கொடுத்து நிற்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
சிறிலங்கா இராணுவத்தின் ஆட்டிலெறித் தளத்தை கைப்பற்றி இராணுவ நிலைகள் மீது புலிகள் தாக்குதல்
சிறிலங்கா படையினரின் பல கிலோ மீற்றர் தூரம் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவியுள்ளதுடன் கிளிநொச்சிக்கு அண்மையாக இருந்த படையினரின் பீரங்கி நிலைகளையும் கைப்பற்றியுள்ளனர் என்று கொழும்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
Tuesday, March 10, 2009
நாம் எங்கோ செல்கிறோம்…
பெற்ற பிள்ளையை, வறுமையின் காரணமாக தெருவிலும், குப்பையிலும் வீசிச் செல் லும் தாயை கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால், பள்ளி வாசமே இல்லாத 10 வயது சிறுமி, பெற்றோருக்கு ஐந்து ஆண்டுகளாக மூன்றுவேளை சோறிட்டு வருகிறாள்; இவளது மூலதனம் ஒரே ஒரு கயிறு. மேட்டுப்பாளையம், அண்ணாஜிராவ் ரோடு; வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் நிறைந்த பகுதி. எப்போதும் "படுபிசி'யாகவே இருக்கும்.
இங்கு, தரையில் இருந்து 5 அடி உயரத்தில், 10 அடி நீளத்தில் கட்டப்பட்டிருக்கிறது கயிறு. அதன் மீது, எவ்வித அச்சமும் இல்லாமல் கையில் நீளமான குச்சியை பிடித்து, "பாலன்ஸ்' செய்தபடி சர்வசாதாரணமாக குறுக்கும், நெடுக்குமாக நடைபோடுகிறாள் 10 வயது சிறுமி. இடையிடையே கயிற்றின் மீது நின்றவாறு "டான்சும்' ஆடுகிறாள்; தவறி விழுந்தால்... நடப்பதோ வேறு. கயிற்றின் மீது நடக்கும் சிறுமியை உற்சாகப்படுத்த தரையில் அமர்ந்தபடி ஆணும், பெண்ணும் சாப்பாட்டு தட் டில் குச்சியை பலமாக அடித்து "இசை முழக்கம்' வேறு செய்கின்றனர். அருகில், மற்றொரு சிறுவன், வாத்தியத்தை முழக்குகிறார். இந்த ஒலி அருகில் இருப் போரை அழைக்கிறது.
ஏழைகளின் வயிற்று பிழைப் புக்கான இந்த சாகசக்காட்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளில் அவ்வப்போது நிகழ்கிறது என்றாலும், ரசிகர்களுக்கு குறைவில்லை. தாளம் கேட்க ஆரம்பித்ததும், கூடிநின்று சிறுமியை ஒரு வித பரபரப்புடன், ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்க்க துவங்கிவிடுகின்றனர். கயிற்றின் மீது நடக்கும் போது, ஒரு காலில் இருந்த செருப்பை லாவகமாக கழற்றி கீழே விடுகிறாள். ஒரு காலில் செருப்பு, மறுகாலில் அலுமினிய சாப்பாட்டு தட்டை கயிற்றின் மீது வைத்தபடி முன்னும், பின்னுமாக நடக்கிறாள். இது போன்ற பல சாகசங்களை கயிற்றின் மீது நிகழ்த்தியபின், தரையில் குதித்து பாத்திரத்தை கையில் ஏந்தியபடி, கூடியிருப்போரிடம் சில்லரை கேட்கிறாள்.
நீண்ட நேரம் ரசிக்க வைத்தாளே... என நினைத்து பலரும் நாணயங்களை தட்டில் போடுகின்றனர். சிலர், ரசிக்க மட்டும் செய்துவிட்டு "நாணயமின்றி' கைவிரித்து நழுவிச் செல்கின்றனர். "கயிறு சாகசக்காரி' சிறுமி கீர்த்தி(10) கூறுகையில், ""நாங்கள் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.ஐந்து ஆண்டுகளாக ஊர், ஊராகச் சென்று இது போன்ற சாகசம் செய்து, கிடைக்கும் சில்லரை காசுகளை கொண்டு பிழைப்பு நடத்தி வருகிறோம். ஒரு நாளைக்கு 200 ரூபாய் வரை தேறும். இரவில், கோவில், பஸ் ஸ்டாண்ட் என ஏதாவது ஓரிடத்தில் படுத்து தூங்குவோம். மறுநாள் மீண்டும் கிளம்பிவிடுவோம். நான் பள்ளிக்கு போனதில்லை; வகுப்பறை எப்படி இருக்கும் என்றே தெரியாது,'' என்றார்.